7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்தி: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க உள்ளது. 2024 ஆம் ஆண்டின் துவக்கமே அட்டகாசமாய் அமைந்துள்ளது. ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி அதிகரிப்பு


ஜனவரி 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது சில நாட்களுக்கு முன் தெளிவானது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீத ஏற்றம் ஏற்பட்டால் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும். ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) இந்த அதிகரிப்பு பொருந்தும். ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 50 சதவீதமாக உயரும்.


டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான (DA Hike) அறிவிப்பை அரசாங்கம் மார்ச் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி திருத்தத்திற்கான அறிவிப்பு மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியிடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மார்ச் மாதம் அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அரியர் தொகையுடன் பெரிய தொகை ஊழியர்களின் கணக்கில் வரும்


அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வந்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களின் டி ஏ அதிகரிப்பு தொகையையும் அரியர் தொகையாக (DA Arrears) ஊழியர்கள் மாத சம்பளத்துடன் பெறுவார்கள். ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் ஒரு பம்பர் வரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அகவிலைப்படி திருத்தம் எவ்வாறு நடக்கிறது


தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு அதாவது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. இந்த ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படையில் திருத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத அகவிலைப்படி ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகின்றன.


மேலும் படிக்க | டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்


2023 ஆம் ஆண்டின் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான ஏசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.


ஜனவரி 2024 அகவிலைப்படி திருத்தத்தின் சிறப்பம்சம்


ஜனவரி முதலான அகவிலைப்படி திருத்தத்தில் ஒரு சிறப்பு உள்ளது. ஏனெனில் இந்த முறை அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால் அதன் பிறகு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருக்கும். ஏழாவது ஊதிய குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படித்தொகை அடிப்படை சம்பளத்துடன் (Basic Salary) சேர்க்கப்பட வேண்டும். அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால் அதன் பிறகு அகவிலைப்படி பூஜியமாக்கப்படும். அகவிலைப்படியின் தொகை ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும். 


அதன் பிறகு மீண்டும் அகவிலைப்படி கணக்கீடு 0%, 1%, 2% என்ற அடிப்படையில் இருக்கும். ஆகையால் இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு வந்தவுடன் ஊழியர்களின் சம்பளத்துடன் அவர்களது அடிப்படை சம்பளத்திலும் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஆகையால் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான அறிவிப்புக்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மேலும் படிக்க | CBDT வரி செலுத்துவோருக்கு அளித்த நல்ல செய்தி: இந்த வரி வழக்குகள் மூடப்படும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ