7th Pay Commission அதிர்ச்சி செய்தி: ஓமிக்ரான் காரணமாக மீண்டும் முடக்கப்படுகிறதா அகவிலைப்படி?
AICPI இன் நவம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.
7th Pay Commission/ DA Hike latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
'ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஜூலை 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலக குறிப்பேடும் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஜூலை வரை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என எழுதப்பட்டுள்ள ஒரு அலுவல குறிப்பாணை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த OM வைரலானவுடன், சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னணியில் இருந்த உண்மை வேறு. சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலான இந்த செய்தி பொய்யானது. மேலும் இந்த அலுவலக குறிப்பாணையும் போலியானது.
புதிய மாறுபாடுகளால் அகவிலைப்படி ஒத்திவைக்கப்படுகிறதா?
உண்மையில், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் (Department of Expenditure) சார்பாக வெளியிடப்பட்டதாக ஒரு அலுவலக குறிப்பாணை சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதில், கொரோனா வைரஸின் (Covid 19) புதிய மாறுபாடான ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணம் ஆகியவை நிலைமையை சமாளிக்க, ஜூலை 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வைரல் பதிவில் என்ன கூறப்பட்டுள்ளது?
அரசின் உண்மை சரிபார்ப்பு தளமான PIB, தங்கள் தளத்தில் இந்த செய்தியை போலியானது மற்றும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வைரல் பதிவு 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் துவங்கிய போது அரசால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையைப் போல் உள்ளது. இதன் காரணமாக மடத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) இதன்மீது நம்பிக்கை ஏற்பட்டது. கொரோனா தொற்று துவங்கியபோது, 18 மாதங்களுக்கு, அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை ஜூன் 2021 வரை ஒத்திவைத்தது என்பது கவனிக்கத்தக்கது.
ALSO READ |7th Pay Commission: அரசு மிகப்பெரிய மாஸ் திட்டம்; மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி
எனினும், கடந்த ஆண்டு ஜூலை 2021 முதல் இதில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் அதிகரிப்பும் ஏற்பட்டது. இப்போது சில விஷமிகள் முன்னர் வெளியிடப்பட்ட குறிப்பாணையைப் போன்ற ஒன்றை உருவாக்கி இந்த வதந்தியை பரப்ப முயன்றனர். எதிர்பாராத விதமாக அதிகமாக பரவி வரும் ஓமிக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு ஜூலை 2022 வரை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இந்த குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எப்போது அதிகரிக்கப்படும்? உயர்வு எப்போது?
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Alllowance) ஜனவரி 2022 இல் அதிகரிக்கப்பட உள்ளது. இருப்பினும், இது எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து பிப்ரவரியில் அறிவிக்கப்படும். AICPI இன் நவம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் வந்துள்ளன. AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.
டிசம்பர் மாதத்தின் எண்ணிக்கை 2022 ஜனவரி இறுதியில் வரும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு, அடுத்த அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும் என்பது முடிவு செய்யப்படும். இதைத் தொடர்ந்து அரசு இதை அறிவித்து பின்னர் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும். 2022 ஜனவரியில் அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பது நவம்பர் 2021 வரையிலான தரவுகளில் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 33 சதவீதமாக உயரக்கூடும்.
ALSO READ | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி! விரைவில் ரூ.2 லட்சம் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR