புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே புகைபிடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். ஆனால் நம் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பிற வியாதிகள் உயிர்கொல்லி நோய்களாக உருவாகியிருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தற்போது ஒரு அறிவியல் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் புகைபிடிப்பதை விட உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவையே பெருமளவிலான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த புதிய ஆராய்ச்சியின் விவரங்கள், பிஎம்சி பொது சுகாதாரம் (open-access journal BMC Public Health) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.


Also Read | உடல் பருமன் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும், சிறந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு Tips


2003 மற்றும் 2017 க்கு இடையில், புகைபிடிப்பால் ஏற்படும் இறப்புகளின் சதவீதம் 23.1 சதவீதத்திலிருந்து 19.4 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில் உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் 17.9 சதவீதத்திலிருந்து 23.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறும் தகவல்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.


உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு காரணமாக ஏற்படும் இறப்புகள் 2014 ஆம் ஆண்டில் புகைபிடிப்பதன் காரணமாக இருந்ததை விட அதிகரித்துவிட்டதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


"புகைபிடிப்பது என்பது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல், பிறரின் உரிமைகளில் தலையிடுவது என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. ஏனெனில் புகைப்பிடித்தலை தவிர்த்தால், மரணத்தை தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்வும் முக்கிய காரணமாகும்.


Also Read | இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்...


இதன் விளைவாக, ஐக்கிய இராச்சியத்தில் புகைபிடித்தல் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உடல் பருமன் அதிகரித்துள்ளது. எங்கள் ஆராய்ச்சியின்படி, 2014 முதல், உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவை இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் புகைபிடிப்பதை விட அதிகமான இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது, என்று Glasgow பல்கலைக்கழத்தை சேர்ந்த ஜிம் பெல் கூறினார்.


வயது வந்தவர்களிடையே, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிகப்படியான உடல் கொழுப்பு ஆகியவை ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராய, ஆசிரியர்கள் இங்கிலாந்திற்கான சுகாதார ஆய்வின் ஒரு பகுதியாக 2003 மற்றும் 2017 க்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.  எனவே உடல் எடையை சரியாக பராமரித்தால் நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழலாம்.


Also Read | துபாய்க்கு காய்கறி அனுப்பும் MS Dhoni, கதையல்ல, நிஜம்!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR