மனிதர்களுக்கும் விலங்குகளுடன் இடையில் நல்ல உறவு இருக்கிறது என்பது உண்மை தான்.  அதனால் தான் மக்கள் ஆர்வமுடன் நாய், பூனை மாடு போன்றவற்றை வளர்க்கிறார்கள்.  அபூர்வமாக சிலர் பாம்புகளை வளர்ப்பது குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் ஒருவர் பாம்பை மணந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்தை (Thailand) சேர்ந்த ஒரு நபர், தனது இறந்த போன காதலிதான் பாம்பாக புனர்ஜென்மம் எடுத்துள்ளார் எனக் கூறி அதனை மணண்ட்து குடித்தனம் நடத்தி வருகிறார். அவர் மணந்து கொண்ட பாம்பு மிகவும் விஷத் தன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பை மணந்த நபர், தான் தனது காதலியை மிகவும் நேசிப்பதாக என்று கூறினார்.


அவரது காதலி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இளைஞன் இந்த பாம்பைக் கண்டான். இந்த பார்த்ததும், தனது காதலி தான் பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார் என கூறி 10 அடி நீளமுள்ள ஒரு நச்சு பாம்பை மணந்தான்.


ALSO READ | 10 திருமணத்திற்கு பிறகும் 'Mr.Right' கிடைக்காமல் அவதிப்படும் அமெரிக்க பெண்..!!!


இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மனிதன் அந்த பாம்பை வீட்டில் தன் மனைவியைப் போல வீட்டில் வைத்திருக்கிறான். இது மட்டுமல்ல, அவர் அந்த பாம்புடன் திருமணம் (Marraige) செய்ததிலிருந்து அதனுடன் தான் தூங்குகிறார். அவர் பாம்புடன் அமர்ந்து சாப்பிடுகிறார். 


அதோடு நிற்கவில்லை, அந்த நபர் பாம்புடன் சுற்றுலாவிற்குச் (Tourism) சென்றார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாம்பும் அந்த இளைஞனுடன் மிகவும் அன்பாக வாழ்ந்து வருகிறார். அந்த பாம்பு அந்த இளைஞனுக்கு எந்த வகையிலும் தீங்கு செய்யவில்லை. அந்த நபரின் நண்பர் ஒருவர் தனிப்பட்ட ஜோடியின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


ALSO READ | முதன் முறையாக மண்ணிலிருந்து விண்ணுக்கு பெண்ணை அழைத்துச் செல்லும் NASA-வின் Artemis Mission


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR