மண்ணைத் தாண்டி விண்ணுக்கு பென்ணை அழைத்துச் செல்ல அமெரிக்க விண்வெளி மையமான நாசா முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஏஜென்சி நாசா ஆர்ட்டெமிஸ் பணித்திட்டத்தின் கீழ் நிலவுக்கு முதன் முறையாக ஒரு பெண்ணை அழைத்துச் செல்வதில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஏஜென்சியின் கூற்றுப்படி, அதன் விண்வெளித் திட்டம் ஆர்ட்டெமிஸ் அதன் செவ்வாய் கிரகத்திற்கான பணித்திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
நாசா (NASA) தனது பணித்திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் இதற்கு முன்பு செல்லாத நிலவின் பகுதிகளை ஆராய்வார்கள் என்று கூறியது. இந்த பணியில் பிரபஞ்சத்தின் மர்மங்கள் ஆராயப்படும். இந்த பணி சூரிய மண்டலத்தில் மனிதர்களின் நோக்கத்தை விரிவாக்கும். இந்த பணி மூலம், நிறுவனம் நிலவின் மேற்பரப்பில் நீர், பனி மற்றும் பிற இயற்கை வளங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் நடத்தும்.
ஆர்ட்டெமிஸ் பணிக்கு நாசா மற்றும் ஈஎஸ்ஏ இடையே ஒப்பந்தம்
ஆர்ட்டெமிஸ் பணியில் ஒத்துழைப்புக்காக நாசா மற்றும் ஈஎஸ்ஏ (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிலவு குறித்த விரிவான ஆய்வுக்கு சர்வதேச பங்காளர்களை ஈடுபடுத்தும் நோக்கம் கொண்டது. எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் செய்வதற்கும் இந்த பங்களிப்பு அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது. நாசா மற்றும் ஈஎஸ்ஏ-வின் ஒப்பந்தம் ஆர்ட்டெமிஸ் பணித்திட்டத்தின் கீழ் நிலவில் சர்வதேச குழு உறுப்பினர்களை பணியமர்த்துவதற்கான முதல் முறையான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
ALSO READ: நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!
நிலவு (Moon) குறித்த ஆராய்ச்சியில் நாசா இதுவரை இப்படிப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் மற்ற சர்வதேச பங்காளிகளும் இதில் ஈடுபடுவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. இது நிலவு குறித்த ஒரு உறுதியான ஆய்வுக்கு வழி வகுக்கும்.
நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷன் பற்றிய சில விஷயங்கள்
ஆர்ட்டெமிஸ் பணித்திட்டத்தின் கீழ் மெற்கொள்ளப்படும் நிலவு குறித்த ஆராய்ச்சி திட்டத்தின் மூலம், நாசா 2024 ஆம் ஆண்டிற்குள் முதன் முறையாக ஒரு பெண்ணையும் அடுத்த ஆணையும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. நிலவின் தென் துருவம் உட்பட நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களை தரையிறக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
-ஆர்ட்டெமிஸ் பணித்திட்டத்தின் மூலம், செவ்வாய் கிரகத்தில் எதிர்கால ஆய்வுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் வணிக அணுகுமுறைகளை நிரூபிக்க நாசா விரும்புகிறது.
- நாசாவின் புதிய ராக்கெட் விண்வெளி வெளியீட்டு அமைப்பு- SLS ஆர்ட்டெமிஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஓரியன் விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து நிலவிற்கு அழைத்துச் செல்லும் என்று அறியப்படுகிறது.
-ஓரியன் விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி வாழவும் பணிபுரியவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே போல் நிலவின் மேற்பரப்பில் பலவித ஆய்வுகளையும் செய்வார்கள்.
-ஓரியன் விண்கலம் என்பது நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வட்டமிடும் ஒரு சிறிய ஊர்தியாகும்.
- ஆர்ட்டெமிஸ் பணித்திட்டத்தில் செல்லும் விண்வெளி வீரர்களுக்காக புதிய விண்வெளி சூட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எக்ஸ்ப்ளோரேஷன் எக்ஸ்ட்ராவாஸ்குலர் மொபிலிட்டி யூனிட் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த விண்வெளி-சூட் (Space Suit) மேம்பட்ட இயக்கம் மற்றும் தகவல்தொடர்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இது மைக்ரோ கிராவிட்டியில் Space walk செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR