Aadhaar அட்டையில் பெரிய மாற்றம்: இனி `தந்தை / கணவர்` பெயர் இடம்பெறாது, விவரம் உள்ளே
ஆதார் அட்டையில் அவ்வப்போது பல முக்கிய மாற்றங்களை UIDAI செய்து வருகிறது. சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு மாற்றம் ஆதார் அட்டையில் செய்யப்பட்டுள்ளது.
Aadhaar Latest Update: ஆதார் அட்டை இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் நடக்கப் போகின்றன.
இனி நீங்கள் ஆதார் அட்டையைப் (Aadhaar Card) புதுப்பித்தால், தந்தை அல்லது கணவருடனான உறவின் அடையாளம் அட்டையில் வெளிப்படுத்தப்படாது. ஆதார் அட்டையால் இனி உறவுகளை அடையாளம் காண முடியாது. இனி இது அடையாளத்தின் ஆதாரமாக மட்டுமே இருக்கும். ஆதார் அட்டையில், இனி, தந்தை அல்லது கணவருக்கு பதிலாக, 'கேர் ஆஃப்' என எழுதப்பட்டிருக்கும்.
உறவுக்கு பதிலாக 'கேர் ஆஃப்' என்று எழுதப்பட்டிருக்கும்
சமீபத்தில், ஒரு விண்ணப்பதாரர், தனது குடும்பத்தின் முகவரி (Address Proof) மாறியதால், அதை மாற்ற, தனது குடும்பத்தின் ஆதார் அட்டைகளை புதுப்பித்தார். புதுப்பித்தலுக்குப் பிறகு, அதில் 'தந்தை' என்று, உறவு குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் 'கேர் ஆஃப்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவறுதலாக நடந்தது விட்டது என்று அவர் நினைத்தார். ஆனால் பின்னர் அவர் ஆதார் மையத்திற்குச் சென்று அதைப் பற்றி விசாரித்தபோது, இனி, இப்படித்தான் எழுதப்பட்டிருக்கும் என அவருக்குத் தெரிய வந்தது.
ALSO READ: Aadhaar Card: ஒரே இணைப்பிலிருந்து எளிதாக பதிவிறக்கலாம், முழு செயல்முறை இதோ
ஆதார் புதுப்பிப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட CSC-யின் நிர்வாக இயக்குநரின் கூற்றுப்படி, ஆதார் அட்டையில் இப்போது தந்தை, மகன், மகள் என்ற குறிப்புக்கு பதிலாக, 'கேர் ஆஃப்' என எழுதப்பட்டு வருகிறது. பெயர் மற்றும் முகவரியைக் கொடுத்து ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். ஆதார் அட்டையின் மூலம் உறவுகளை அடையாளம் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்றம் ஏற்பட இதுவே காரணம்
UIDAI யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2018 ஆம் ஆண்டில், ஆதார் அட்டை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு வந்தது. அதில் மக்களின் தனியுரிமை பற்றி பேசப்பட்டது.
இந்த முடிவின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் உறவின் அடையாளம் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் எப்போது செயல்படுத்தப்பட்டன என்பது பற்றிய எந்த தகவலையும் UIDAI வழங்கவில்லை.
ALSO READ: Aadhaar-ல் 2 முக்கிய சேவைகளை நிறுத்தியது UIDAI: வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சிக்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR