பான் ஆதார் இணைப்பு: இந்திய அரசாங்கம் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2022 என்று நிர்ணயித்துள்ளது. கடைசி தேதிக்குள் இந்த கார்டுகளை இணைக்கவில்லை என்றால், நீங்கள் பல்வேறு அபராதங்களை சந்திக்க நேரிடும். இது மட்டுமல்ல, மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், உங்கள் பான் கார்டு செயலிழக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தவிர பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை-யை இணைக்காதவர்கள் மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியமாகும். மேலும், வருமான வரி தாக்கல் செய்யும்போதும் விண்ணப்பிக்கவும், வட்டி செலுத்தும் போதும் உங்கள் பான் எண்ணை உள்ளிட வேண்டியது கட்டாயமாகும்.


உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் எந்த பரிவர்த்தனையிலும் உங்கள் பான் கார்டை வழங்க முடியாது. இருப்பினும், அபராதம் செலுத்துவதன் மூலம் காலக்கெடுவிற்குப் பிறகு இரண்டு கார்டுகளையும் இணைக்கலாம்.


பான் ஆதார் இணைக்கவில்லை என்றால், அதன் விளைவு என்னவாக இருக்கும்?


- பான் கார்டு செயலிழந்துவிடும், மேலும் பரிவர்த்தனைகளுக்கு அதைப் பயன்படுத்த முடியாது.


- வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் உங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி இந்த வசதியை ஆதார் மூலமே பெறலாம் 


- காலக்கெடுவுக்குப் பிறகு இந்த இரண்டு கார்டுகளையும் இணைத்தால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


- ஊடக செய்திகளின் படி, அபராதம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அபராதம் 1,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.


- உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காமல் உங்களால் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியாது.


- பங்குச் சந்தை-யில் முதலீடு செய்ய முடியாது, ஏனெனில் டிமேட் கணக்கைத் திறக்கும்போது பான் கார்டைக் குறிப்பிடுவது அவசியமாகும்.


மேலும் படிக்க | Aadhaar Card மிகப்பெரிய அப்டேட்: இனி ஆதார் பதிவிறக்கம் செய்வது எளிதானது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR