RBI VS Paytm: ரிசர்வ் வங்கியின் தடையால் பேடிஎம் பங்கு விலை கடும் வீழ்ச்சி! உங்களுக்கு என்ன பாதிப்பு?

Paytm மீதான ரிசர்வ் வங்கியின் தடையானது பேமெண்ட் வங்கிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்புகள் உண்மையாகிவிட்டன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 14, 2022, 11:23 AM IST
  • பேடிஎம் பங்கு விலை கடும் வீழ்ச்சி!
  • ரிசர்வ் வங்கியின் தடையின் எதிரொலி
  • உங்களுக்கு என்ன பாதிப்பு?
RBI VS Paytm: ரிசர்வ் வங்கியின் தடையால் பேடிஎம் பங்கு விலை கடும் வீழ்ச்சி! உங்களுக்கு என்ன பாதிப்பு? title=

Paytm மீதான ரிசர்வ் வங்கியின் தடையானது புதிய PPBL வாலெட்டுகளுக்குப் பதிவு செய்யும் பயனர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்க உடனடி நடவடிக்கைகளை எடுப்பதாக பேடிஎம் அறிவித்திருந்தாலும், அதற்குக் மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Paytmஇன் தாய் நிறுவனமான One 97 Communications Ltd இன் பங்குகள் திங்களன்று கிட்டத்தட்ட 12% சரிந்து, இதுவரை இல்லாத வகையில் ரூ.672.10 என்ற விலையை எட்டியது. 

 

Paytm Payments Bank Ltd இனிமேல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்ததை அடுத்து அதன் பங்குகள் திங்களன்று (2022, மார்ச் 14) சரிந்தன. 

என்எஸ்இ-யில், பேடிஎம் வங்கியின் பங்குகளின் விலை, வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் ரூ.675 ஆக இருந்தது. இது முந்தைய விலையில் இருந்து 12.9% குறைவாகும். பிஎஸ்இ பங்குச் சந்தையில்,இன்று காலை ரூ.684-ல் துவங்கிய பேடிஎம் பங்கின் விலைகள் வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 11.7% சரிந்தது. 

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், One 97 Communications Ltd இன் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.1,285 ஆகக் குறைத்தது. இதன் முந்தைய இலக்கு விலைரூ.1,352 ஆகும். 

 

 

புதிய PPBL வாலட்கள் அல்லது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குகளுக்குப் பயனர்களை பதிவுசெய்வதற்கு Paytm மீது RBIயின் தடை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ICICI செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. 

“இப்போது, ​​புதிய பயனர்களை உள்வாங்குவதில் மிதமான தன்மையையும், அதிகரிக்கும் கட்டண வருவாயில் பாதகமான தாக்கத்தையும் எதிர்பார்க்கிறோம் (வாலட்கள் ஒரு முக்கிய பணமாக்கக்கூடிய கட்டண கருவியாக இருப்பதால்), நாங்கள் எங்கள் இலக்கு விலையை ரூ.1,285 ஆக (முன்பு ரூ.1,352) திருத்துகிறோம். மேலும், இது ஒரு சிறிய நிதி வங்கியாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் PPBL இன் திட்டத்தை ஒத்திவைக்கலாம் (மே'22 முதல் விண்ணப்பிக்க தகுதியுடையது என்றாலும்" என்று தரகர் திங்கள்கிழமை ஒரு குறிப்பில் கூறினார்.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஒரு முன்னணி வங்கி மீதான தடையின் சமீபத்திய நிகழ்வுகள், கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நீண்ட காலம் ஆகலாம் என்று கூறுகிறது

மேலும் படிக்க | Paytm மூலம் இலவச LPG சிலிண்டர் பெறலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News