ஆதார் அப்டேட் செய்ய புதிய வசதி: இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை

Aadhaar Update: வீட்டில் இருந்தபடியே அபாயிண்ட்மெண்ட் பெற்று ஆதார் சேவை மையத்தின் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2022, 06:32 PM IST
  • ஆதாரை புதுப்பிக்க புதிய சேவை.
  • புதிய ஆதாரைப் பெற ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் எடுக்கவும்.
  • இப்போது மையத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
ஆதார் அப்டேட் செய்ய புதிய வசதி: இனி வரிசையில் நிற்கத் தேவையில்லை  title=

ஆதார் அட்டை புதுப்பிப்பு: ஆதார் அட்டை இந்தியாவில் அத்தியாவசிய ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டை வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளைப் பெற கட்டாய ஆவணமாகவும் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனித்துவமான ஆவணமாகும். ஏனெனில் அதில் தேவையான தகவல்கள் அனைத்தும் இருக்கும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், அரசாங்க படிவங்களை நிரப்புவது வரை, அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் அட்டையை எளிதாக புதுப்பிக்கலாம்!

இருப்பினும், பல நேரங்களில் நீங்கள் ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகிய விவரங்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அல்லது, புதிய ஆதார் அட்டையை உருவாக்க நேரிடலாம். இப்படிப்பட்ட தருணங்களில் நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே அபாயிண்ட்மெண்ட் பெற்று ஆதார் சேவை மையத்தின் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம். ஆதார் அட்டையை அப்டேட் செய்ய எப்படி அப்பாயிண்ட்மெண்ட்டை பெறுவது என இந்த பதிவில் காணலாம். 

இந்த பணிகளையெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் மூலம் செய்யலாம்

- புதிய ஆதார் பதிவு

- பெயர் புதுப்பிப்பு 

- முகவரி புதுப்பிப்பு

- மொபைல் எண் புதுப்பிப்பு

- மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு

- பிறந்த தேதி புதுப்பிப்பு

- பாலின புதுப்பிப்பு

- பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்

மேலும் படிக்க | PAN Aadhaar Link: இது தான் கடைசி தேதி! அபராதத்தைத் தவிர்க்க உடனே இணைத்துவிடுங்கள் 
 

இந்த முறையில் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட்டைத் திட்டமிடுங்கள்

- https://uidai.gov.in/ க்குச் செல்லவும்.

- My Aadhaar என்பதைக் கிளிக் செய்து, Book a appointment என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- ஆதார் சேவை மையங்களில் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதை தேர்வு செய்யவும்.

- டிராப்டவுனில் உங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- Proceed to book appointment என்பதைக் கிளிக் செய்யவும்.

- மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'புதிய ஆதார்' அல்லது 'ஆதார் புதுப்பிப்பு' டேபைக் கிளிக் செய்யவும்.

- கேப்ட்சாவை உள்ளிட்டு, OTP ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

- OTP ஐ உள்ளிட்டு சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.

- ஆதாரத்துடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடவும்.

- டைம் ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து ‘நெக்ஸ்ட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்படி செய்தால், உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் முழுமையாக நடைபெறும். 

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இதை புதுப்பிப்பது மிக அவசியம்: வீட்டில் இருந்தபடியே செய்யலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News