Aadhaar verification: இந்திய குடிமகன்களின் முக்கியமான அடையாள ஆவணங்களுள் ஒன்றாக இருக்கும் 12 இலக்கங்களை கொண்ட ஆதார் அட்டை அனைத்து விதமான பயன்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.  வங்கி கணக்குகள், பான் கார்டு, மின் இணைப்பு, எரிவாயு என பல்வேறு அத்தியாவசிய தேவைகளுடனும் ஆதார் கார்டை இணைக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.  இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்களில், சிம் கார்டைப் பெறுவது முதல் வங்கிக் கணக்கை திறப்பது வரை பலவிதமான முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் அட்டை தான் முதன்மையான அடையாளமாக செயல்படுகிறது.  பல சேவைகளுக்கும் ஆதார் முதன்மையாக பயன்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தனிநபராது கைரேகை, கருவிழி, தொலைபேசி எண், முகவரி, பிறந்த தேதி போன்ற இன்னும் பிற தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்


பல்வேறு முக்கியமான விஷயங்களுக்கு ஆதாரமாக இருந்துவரும் ஆதார் கார்டு உண்மையானதுதானா என்பதை உறுதிசெய்வது இன்றியமையாதது ஆகும்.  நாம் வைத்திருக்கும் ஆதார் அட்டை போலியானதாக இருந்தால் அரசின் மூலம் நமக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள் மறுக்கப்படுவது மட்டுமின்றி நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.  அதனால் உங்கள் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதனை சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.  ஆதார் அட்டையை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் எப்படி வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.  இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) ஆதார் அட்டைகளை சரிபார்க்க இரண்டு சரிபார்ப்பு முறைகளையும் கிடைக்கச் செய்துள்ளது.


ஆன்லைனில் சரிபார்த்தல்:


உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் சரிபார்க்க, யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று 'எனது ஆதார்' என்கிற பகுதிக்குச் செல்லவும்.  அதன் பின்னர் 'சேவைகள்' என்பதன் கீழ் "சரிபார்ப்பு மற்றும் ஆதார் எண்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, "ஆதார் சரிபார்க்கவும்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.  உங்கள் ஆதார் அட்டை உண்மையானதாக இருந்தால், இணையதளம் "EXISTS" என்பதைக் காண்பிக்கும், அதுவே ஆதார் அட்டை போலியானதாக இருந்தால், அதற்கு பதிலாக ஒரு பிழை செய்தி தோன்றும்.  


ஆஃப்லைனில் சரிபார்த்தல்:


ஆதார் அட்டைகளை ஆஃப்லைனில் சரிபார்ப்பது சாத்தியமானது தான், ஆதார் அட்டையில் உள்ள டிஜிட்டல் கையொப்பத்தைச் சரிபார்க்க கியூஆர் குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம் அல்லது mAadhaar ஆப் மூலம் ஆதார் அட்டையை அங்கீகரிக்கலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ