ஆதார் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு வழங்கபடுவது அவசியம் என தெரிவித்துள்ளனர்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சிம் கார்டுகள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை உத்தரவிட்திருந்தது. 


ஆதார் அடையாள அட்டை எடுக்கும் போது பதியப்பட்ட முகத்தையும், சிம் கார்டு வாங்க வருவோரின் முகத்தையும் பொருத்திப் பார்த்து அடையாளம் காணும் நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆதார் தவிர்த்த பிற அடையாள அட்டைகளை வழங்கி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.


முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டத்தை இன்னபிற சேவைகளுக்கும் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் இந்த திட்டம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.


கடந்த சில மாதங்களாக சிம் கார்டு விற்பனையாளர்கள் ஆதார் விவரங்களை போலியாக தயாரித்து ஆயிரக்கணக்கான சிம்கார்டுகளை இயக்கி வருவதாக தகவல்கள் கண்டறியப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்த  முகப்பதிவு முறை அமல்படுத்தப்படுகிறது.