இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது, அப்படி முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட ஆதார் அட்டையில் நமது பெயரிலோ அல்லது பிறந்த தேதியிலோ அல்லது முகவரி என எந்த விவரத்திலோ ஏதேனும் பிழைகள் இருப்பின் அதில் திருத்தம் மேற்கொள்ள இனிமேல் ஆதார் மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அதில் திருத்தும் செய்யவேண்டிய தேவையில்லை.  சிறிய திருத்தத்திற்காக அலைந்து திரிந்து, பல மணி நேரங்கள் உங்கள் பொன்னான நேரத்தை செலவிடாமல் இருக்க அரசு இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வசதியை செய்து கொடுத்திருக்கிறது.  இனிமேல் நீங்கள் வீட்டிலிருந்தபடியே மொபைலில் உங்களின் ஆதார் விவரங்களில் திருத்தங்கள் செய்துகொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்!



இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை UIDAI அதனை ட்விட்டர் பக்கத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.  இதுபற்றிய ட்வீட்டில், 'மக்களின் விவரங்களான (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி) போன்றவற்றை ஆன்லைனில் எளிதாக அப்டேட் செய்து, எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி மூலம் அங்கீகரிக்கப்படும்.  ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்ள யூபிஐ மூலம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.  அதேசமயம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்தவர்களால் மட்டுமே இந்த திருத்தங்களை செய்துகொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அவ்வாறு மொபைல் நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் எவ்வித அப்டேட்டையும் செய்ய்துகொள்ள முடியாது.


அதனால் திருத்தம் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் ஆதார் மையங்களுக்கு சென்று முதலில் மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அதன் பிறகு தான் ஆதார் அட்டையில் புதுப்பிப்பு செய்ய முடியும்.  இப்போது ஆதார் அட்டையில் எந்த விவரத்தை நீங்கள் திருத்தம் செய்ய விரும்புகிறீர்களோ அதை எவ்வித சிரமும் இல்லாமல் செய்துகொள்ளலாம்.  படிப்பு, வேலை என பல இடமங்களிலும் ஆதார் அட்டை பயன்படுவதால் அதனை நீங்கள் சரியாக பராமரித்து வேண்டிய அப்டேட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | SBI Account: எஸ்பிஐ வங்கியில் புதிய கணக்கு தொடங்குகிறீர்களா? வங்கிக்கு போக வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ