குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்..? அபிஷேக் பச்சன் கொடுக்கும் அற்புதமான டிப்ஸ்..!
Abhishek Bachchan Parenting Tips: பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
உலக அழகி என்று பல வருடங்களாக ரசிகர்களால் புகழப்படும் நடிகை, ஐஸ்வர்யா ராய். இவர், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு மணந்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு 12 வயது ஆகிறது.
அபிஷேக் பச்சன் நேர்காணல்..
நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். தன் மகள் ஆரத்யாவிற்கு 13 வயது ஆக இருப்பதை குறிப்பிட்ட அவர், பெற்றோர்களுக்கான சில டிப்ஸையும் பகிர்ன்ஹ்டார். டீன் ஏஜ் வயதில் இருக்கும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது, அப்பா-அம்மா ஆகிய இருவரில் யாருக்கு அதிக பொறுப்பு இருக்கிறது போன்ற விஷயங்களை பேசியுள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள் பல உபயாேகரமாக இருப்பதாக சில இளம் தலைமுறை பெற்றோர்களே கூறி வருகின்றனர்.
அபிஷேக் பச்சன்:
அபிசேக் பச்சனிடம் பெற்றோர்களுக்கான டிப்ஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அவர் குழந்தைகளை அவரவர் போக்கிலேயே வளர விட வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படிதான் அவர்களுக்கான வாழ்க்கையும் அமையும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நாம் குழந்தையாக இருந்த போது நமது பெற்றோர் நாம் வேகமாக வளர்ந்து விட்டோம் என்று நினைத்திருப்பர். இப்போது உள்ள தலைமுறையினர் நன்கு வளர்ந்த உலகில் பிறந்துள்ளனர். அவர்கள், நாம் பார்த்து வளர்ந்த மாற்றங்களை பார்க்கவில்லை” என்று கூறினார்.
மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?
இந்த தலைமுறையினர் குறித்து அபிஷேக் பச்சன்:
மிகவும் வளர்ந்து விட்ட உலகில் இந்த தலைமுறையினர் வளர்ந்து வருவதாக கூறிய அபிசேக் பச்சன், தனது தங்கை தன் பிள்ளைகளுக்கு 10 வயதிலேயே செல்போன் கொடுத்து விட்டதாகவும் இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு “நாம் வளர்ந்த தலைமுறை வேறு, இப்போது இருக்கும் தலைமுறை வேறு” என அவர் பதிலளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். “முதன் முதலில் தாஜ் மஹாலை பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இப்போதைய தலைமுறையினருக்கு அப்படியிருக்காது. ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே தங்கள் கை பேசிகளில் தாஜ் மஹாலை போட்டோவாக பார்த்து விட்டனர்” என்று கூறினார்.
“என் மனைவிதான் எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறார்..”
தன் குடும்பத்தை பற்றி பேசிய அபிஷேக் பச்சன், தன் வீட்டு பொறுப்புகளை தன் மனைவிதான் அதிகமாக கவனித்து கொள்வதாகவும் அவர் தன்னை வெளியில் சென்று பணிபுரிய அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதாக கூறிய அவர், அவர்கள் அந்த படிநிலைகளை தாண்டி வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்றும் கூறினார். பலர், “நீ என் அம்மா என்பதால் நான் உன் பேச்சை கேட்க வேண்டுமா..?” என்று கேள்வி கேட்கும் அளவிற்கு மன முதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறினார்.
பெற்றோர்களுக்கான டிப்ஸ்:
>பெற்றோர்களாக, நம் பிள்ளைகளுக்கு நாம் முதலில் மரியாதை கொடுக்க வேண்டும்.
>நம் குழந்தைகளின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் அவர்களின் சுய மரியாதையையும் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
>சில சமயங்களில் நாம் வளர்ந்தது போலவே குழந்தைகளையும் வளர்க்க நினைப்போம். அது போலத்தான் நமக்கு ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்திருப்பர். ஆனால், இந்த தலைமுறையினர் வித்தியாசமானவர்கள். அவர்கள், உணர்வு ரீதியாக எளிதில் பாதிக்கப்பட்க்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆதலா, அவர்களை பொறுமையுடன் கையாள வேண்டும்.
>உங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள உங்கள் குழந்தையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க கூடாது. அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ