‘நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள்’- Virat, Anushka-வை வாழ்த்திய PM Modi!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 18, 2020, 03:53 PM IST
  • 2021 ஜனவரியில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தெரிவித்திருந்தனர்.
  • பிரதமர் மோடி, பெற்றோர்களாகப் போகும் விராட் மற்றும் அனுஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
  • நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்-பிரதமர் மோடி.
‘நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள்’- Virat, Anushka-வை வாழ்த்திய PM Modi!!

2021 ஜனவரியில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா (Anushka Sharma) சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அகர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, விராட் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு 70 வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

"எங்கள் கெளரவ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். @narendramodi @PMOIndia" என்று கோலி ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி (PM Modi), பெற்றோர்களாகப் போகும் விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர்கள் இருவரும் நிச்சயமாக அற்புதமான பெற்றோர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்.

"நன்றி @imVkohli! நான், @AnushkaSharma மற்றும் உங்களையும் வாழ்த்த விரும்புகிறேன். நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்! "என்று பிரதமர் எழுதினார்.

ஆகஸ்ட் 27 ம் தேதி, தங்களுக்கு விரைவில் குழ்தை பிறக்கவுள்ளதாகக் கூறி கோலியும் அனுஷ்காவும் அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

ALSO READ: அப்பா ஆகும் விராட் கோலி… ட்விட்டர் மூலம் அறிவித்த அனுஷ்கா ஷர்மா!

இருவரும் அவரவர் சமூக ஊடக அகௌண்டுகளில் தங்கள் படத்தை வெளியிட்டிருந்தனர். விராட் மற்றும் அனுஷ்கா டிசம்பர் 11, 2017 அன்று இத்தாலியின் டஸ்கனியில் நடந்த ஒரு ஆடம்பர விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

And then, we were three! Arriving Jan 2021

A post shared by Virat Kohli (@virat.kohli) on

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இல் நடைபெறவுள்ள 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) கோஹ்லி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (RCB) வழிநடத்த உள்ளார்.

மறுபுறம், அனுஷ்கா, இதற்கு முந்தைய தனது கடைசி படமான ‘ஜீரோ’-வுக்குப் பிறகு வேறு எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை. இதில் அவர் ஷாரூக் கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். 

ALSO READ: தாய்மையின் அழகான தருணங்களை அனுபவிக்கும் அனுஷ்கா சர்மா.!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News