சென்னை: தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணரும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதில் முன்னணி பங்கு வகித்த நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது விவேக்குக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, மயக்கமானார்.  


உடனடியாக நடிகர் விவேக் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் இதய செயல்பாடு குறைந்துவிட்டது. எனவே எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  


Also Read | Breaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்


இரு நாட்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியை அரசு மையத்தில் போட்டுக் கொண்டு, மக்கள் அனைவரும் தடுப்பூசியை அலட்சியப்படுத்தாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணிக்கு நடிகர் விவேக் காலமானதாக மருத்துமனை தெரிவித்தது. 59 வயதான விவேக் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.  


சீர்திருத்த கருத்துகளை தனது கதாபாத்திரங்கள் மூலமாக பரப்புவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் விவேக் தவறவிட்டதில்லை. எனவே சின்னக் கலைவாணர் என்று பட்டமும் கிடைத்தது. 


Also Read | பாகிஸ்தானில் வன்முறை வெறியாட்டம்; சமூக ஊடகங்களை முடக்கியது அரசு


பத்மஸ்ரீ விருதால் அலங்கரிக்கப்பட்ட நடிகர் விவேக், சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.  


முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாமை (A. P. J. Abdul Kalam) தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட விவேக், அவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் (Green Kalam) அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார்.


பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் என பல்வேறு இடங்களிலும் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.


ALSO READ: குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR