புதுடெல்லி: இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 2023 இல்  இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் என AFCAT (Air Force Common Admission Test) அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 02/2022, NCC சிறப்பு நுழைவு மூலம் இந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டும்.


 AFCAT 02/2022: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.


விமானத்தில் பறக்கும் பணி மற்றும் தரைப் பணிக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும்.


அதிகாரிகள் நிலையிலான இந்த பணிகளுக்கான அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை ஜூன் 1, 2022 அன்று தொடங்கி ஜூன் 30, 2022 அன்று முடிவடையும்.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்


இந்திய விமானப்படை AFCAT 02/2022 பாடநெறி விவரங்கள்


பதவி: AFCAT நுழைவு (விமானப்படை பொது சேர்க்கை தேர்வு) 02/2022


ஊதிய நிலை : 56100 – 110700/- (நிலை -10)


பதவி: என்சிசி சிறப்பு நுழைவு (NCC Special Entry)


ஊதிய அளவு: 56100 – 110700/- (நிலை -10)


பதவி: வானிலை ஆய்வு நுழைவு (Meteorology Entry)


ஊதிய அளவு: 56100 – 110700/- (நிலை -10)


மேலும் படிக்க | JOB ALERT: அசாம் ரைபிள்ஸ் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கத் தயாரா


இந்திய விமானப்படை AFCAT 02/2022 வயது வரம்பு:


விமான பறப்பு (Flying Branch) ஜூலை 01, 2023 இன்படி 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதாவது ஜூலை 02, 1999 முதல் ஜூலை 01, 2003 வரை பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 


DGCA வழங்கிய செல்லுபடியாகும் மற்றும் தற்போதைய வணிக பைலட் உரிமம் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆண்டுகள் வரை தளர்த்தப்படுகிறது, அதாவது ஜூலை 02, 1997 முதல் ஜூலை 01, 2003 வரை உள்ள பைலட் உரிமம் வைத்திருப்பவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


தரைப் பணி தொழில்நுட்பம்/ தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள் ((Ground Duty (Technical/ Non-Technical)): 2023 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியின்படி 20 முதல் 26 வயதிற்குள் அதாவது ஜூலை 02, 1997 முதல் ஜூலை 01, 2003 வரை பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு


விண்ணப்பக் கட்டணம்: டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், இ சலான் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.


AFCAT நுழைவுக்கு: 250/-


NCC சிறப்பு நுழைவு & வானிலை ஆய்வு ( NCC Special Entry & Meteorology): கட்டணம் இல்லை


எப்படி விண்ணப்பிப்பது: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் careerindianairforce.cdac.in அல்லது afcat.cdac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இந்திய விமானப்படை AFCAT 02/2022 அறிவிப்பு: முக்கியமான தேதிகள்


ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: ஜூன் 01, 2022


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 30, 2022


தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


அறிவிப்பு: davp.nic.in


மேலும் படிக்க | Job Alert: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு TANGEDCO வழங்கும் வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe