பணம் தேவைப்பட்டால் கடன் வாங்குவது மிகவும் சுலபமாகிவிட்டது.  தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் என பலவிதமான தேவைகளுக்கு கடனைப் பெறுவது எளிதாகிவிட்டது. அதிலும் கடனுக்கு கொடுக்கப்படும் குறைவான வட்டி, கவர்ச்சியான சலுகைகளைப் பார்த்தால் கடன் வாங்கியே தீர வேண்டும் என்று கடன் வாங்குபவர்களும் உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய தேதியில் கடன் வாங்குவதன் மூலம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்தில், அந்தப் கடன்தொகையை வங்கியில் திருப்பித் தரலாம். சில சமயங்களில் கடன் தள்ளுபடியும் செய்யப்படுகிறது.


எதுஎப்படியிருந்தாலும், கடன் விஷயத்தில் இப்போது செய்யும் ஒரு சிறிய தவறு கூட பிற்காலத்தில் மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதாவது கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, உடனடியாக வங்கியிடம் இருந்து நீங்கள் பெற வேண்டிய முக்கிய ஆவணங்கள் எவை, செய்ய வேண்டிய வேலை எவை என்பது தெரியாததால் தான் எதிர்காலத்தில் மக்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.


Also Read | வருமான வரி தாக்கல் செய்வதில் நீடிக்கும் சிக்கல்; காலக்கெடு நீட்டிக்கப்படுமா!


உடனடியாக வங்கியிலிருந்து தடை இல்லா சான்றிதழ் (no objection certificate) பெறவும் 
கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, உடனடியாக NOC எனப்படும் தடையில்லா சான்றிதழை வங்கியிடம் கேட்கவும். என்ஓசி கையில் கிடைத்த பிறகு தான் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.


கடன் தொகையை செலுத்திய பிறகு என்ஓசி பெறுவதில் தாமதம் ஏற்படலாம். அப்போது வேறு வேலைகளில் கவனமாக இருந்து இதை வாங்காமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட நேரிடும். இந்த சிறிய தவறு காரணமாக, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 


கடன் அடைத்து முடித்ததற்கான சான்றை (debt closure) பெறுவது மிகவும் முக்கியம்
கடன் வாங்கும் போது பல நேரங்களில் மக்கள் வங்கியின் விதிமுறைகளைப் படிப்பதில்லை. கடன் விதிகளை சரியாக பார்க்காததன் விளைவு, கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் மக்கள் பணம் செலுத்துகின்றனர்.


Also Read | மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், சம்பளத்தோடு ரூ.4500 சேர்ந்து வரும்


அவர்களின் கடன் முடிந்ததற்கான சான்றிதழ் இருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முழுப் பணத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் சென்றாலும் எந்தப் பயனும் இருக்காது. எனவே, கடன் முடிந்தவுடன் வங்கியில் இருந்து இதற்கான ஆதாரத்தை எழுத்து மூலம் பெற்று உங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. 


கிரெடிட் ஸ்கோர் (Credit score) ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்
கடன் தொகையை செலுத்திய பிறகு, இந்த தகவலை உடனடியாக சிபில் (CIBIL)க்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் எந்த தேதியில் எந்த வங்கியில் கடன் வாங்கினீர்கள், உங்கள் கடைசி கடன் தவணை (last EMI) செலுத்திய நாள் எது என்பது போன்ற தகவல்களை சிபிலிடம் தெரிவிக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால், சிபிலின் பதிவுகளில் நீங்கள் ஒரு கடனாளியாகவே தொடர்வீர்கள். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்கும். 


என்ஓசி (NOC) மிகவும் பயனுள்ள விஷயம்
என்ஓசி மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் பல வகையான வேலைகளை எளிதாக முடிக்க முடியும். எதிர்காலத்தில் நீங்கள் கடனின் இருப்பை மாற்ற விரும்பினால், அதற்கு என்ஓசி (NOC) அவசியம் தேவையாகும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப கடன் வாங்கவும். தகுதிக்கு மீறி கடன் வாங்கினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரலாம்.  


Also Read | Ola electric scooters: ஷோரூமில் எப்போ கிடைக்கும்; முழு விவரம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR