ஃபைசர் தடுப்பூசியை தொடர்து மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயால் (CORONAVIRUS) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரின் கண்களும் கொரோனா தடுப்பூசிக்காக (CORONAVIRUS VACCINE) காத்திருக்கின்றன. ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் (Pfizer) நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறு வருகிறது. 


இந்நிலையில், மாடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) விண்ணப்பித்தருந்தனர். இந்த மருந்தின் செயல்திறன் குறித்தும், பரிசோதனை முடிவுகளையும் பரிசீலனை செய்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழுவினர், மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கலாம் என பரிந்துரை செய்தனர். 



ALSO READ | தடுப்பூசியை மட்டும் வைத்து கொரோனாவை தடுக்க முடியாது: WHO எச்சரிக்கை!


இதை தொடர்ந்து, மாடர்னா தடுப்பூசிக்கு FDA அங்கீகாரம் அளித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் மருந்தை அனுப்பும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அதிபர் ட்ரம்ப் (Donald Trump) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மாடர்னா தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மாடர்னா தடுப்பூசி மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. 


மாடர்னா தடுப்பு மருந்தின் 20 கோடி டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் தற்போது விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.  மாடர்னா மருந்தை இரண்டு டோஸ்கள் உடலில் செலுத்தப்பட வேண்டும். இரண்டு டோஸ்கள் இடையே 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். 


ஹவுஸ் ரூல்ஸ் கமிட்டியின் உறுப்பினரும், சுகாதாரத்திற்கான ஹவுஸ் எரிசக்தி மற்றும் வர்த்தக துணைக்குழுவின் குடியரசுக் கட்சியின் தலைவருமான காங்கிரஸ்காரர் மைக்கேல் புர்கெஸ், ஒரு வார கால இடைவெளியில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி அமெரிக்காவின் பிரகாசமான எடுத்துக்காட்டு என்று கூறினார். "இந்த இரண்டாவது தடுப்பூசி இந்த தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவரும் என்பதற்கான சமிக்ஞையாகும், ஆனால் குளிர் மற்றும் காய்ச்சல் காலம் முழுவீச்சில் இருப்பதால், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை நிறுத்த முடியாது.


ALSO READ | அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி..


"தயவுசெய்து உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள், நீங்கள் சமூக தூரத்தை சரியாக செய்ய முடியாவிட்டால் முகமூடி அணியுங்கள், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். இந்த தொற்றுநோயின் ஆரம்பத்தில், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று அமெரிக்கா அறிவித்தது, ஒன்றாக நாங்கள் சேருவோம் முடிவு," புர்கெஸ் கூறினார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR