Airlines Offers: ரயில் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் விமான பயணம்....!!!
பண்டிகை காலத்தில், பயணிகளை அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் நிலையில், பஸ், ரயில் கட்டணங்கள் தற்போது மிக அதிகமாக உள்ளன.
புதுடெல்லி: இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் எங்காவது குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிட்டால், கொஞ்சம் காத்திருங்கள். பண்டிகை காலம் முடிந்த பிறகு, ரயில் பயணத்தை விட விமானப் பயண கட்டணம் மிகவும் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரயிலின் இரண்டாவது வகுப்பு ஏசி கோச்சின் (IInd AC Class ) கட்டணம் ரூ.3575. அதேசமயம் பண்டிகை காலம் முடிந்த பிறகு, விமானத்தின் பயணத்திற்கான கட்டணம் ரூ.2463 ஆக இருக்கும். மும்பை-பெங்களூரு வழித்தடத்தில் உள்ள ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி கோச்சின் கட்டணம் ரூ.1995. இந்த வழித்தடத்தில் விமான கட்டணம் ஏற்கனவே ரூ.2125 என்ற அளவில் உள்ளது.
ALSO READ | Education Loan: கல்விக்கடன் எடுப்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!
முன்பதிவு சலுகைகள்
டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் ரயிலின் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.2570. அதே நேரத்தில், விமான விமான கட்டணம் 1283 ரூபாயாக குறைக்கப்படும். பெரும்பாலான விமான வழித்தடங்கள் ரயில் கட்டணத்தை விட குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் போது, மக்கள் ரயிலை கூட மலிவான கட்டணத்தில் டிகெட்டுகளை பெறலாம். விமான பயண சலுகைகளைப் பெற்று பயனடையலாம்.
ALSO READ | Indian Railway: இந்திய ரயில்வே 4000+ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
பண்டிகை காலம் நவராத்திரியிலிருந்து தீபாவளி வரை நீடிக்கும்
நவராத்திரி முதல் தீபாவளி வரை நாட்டில் பண்டிகைக் காலங்கள் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக, பேருந்துகளில் இருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் விலை மிகவும் அதிகம் உள்ளது. டிமாண்டின் காரணமாக அதிகரித்து வரும் விலை, பண்டிகை காலம் முடிந்த பிறகு, பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறையும். அந்நிலையில், மக்களை ஈர்க்க விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட்டுகளின் விலையை குறைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR