ஜாக்கிரதை! கார் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!
புதிய கார் வாங்கும் முன் பட்ஜெட், கடன் விருப்பங்கள், மாடல்கள் என நீங்கள் வாங்கத் திட்டமிடும் காரை திறம்பட சோதனை செய்து வாங்குவது முக்கியம்.
இந்தியாவில் கார் வைத்து இருப்பது நடுத்தர குடும்பங்களின் கனவாகும். எங்கு செல்வதற்கும் கார் முக்கிய ஒன்றாக பயன்படுகிறது. ஒரு புதிய காரை வாங்குவதற்கு பணம், நல்ல நேரம் மற்றும் அதிக முதலீடுகள் தேவை. கார் வாங்கும் போது சில விஷயங்களை பார்க்காமல் வாங்க கொடுத்து. புதிய கார் வாங்குவதற்கு பண்டிகை காலங்கள் உகந்ததாக கருதப்படுகிறது. கார் தயாரிப்பாளர்கள் கூட இந்த சமயங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகின்றனர். கார்களுக்கு சிறந்த சலுகைகள்/தள்ளுபடிகளை வழங்குகின்றனர். நீங்கள் புதிய கார் வாங்க விரும்பினால் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். பட்ஜெட், கடன் விருப்பங்கள், மாடல்கள் என நீங்கள் வாங்கத் திட்டமிடும் காரை திறம்பட சோதனை செய்து வாங்குவது முக்கியம்.
முதலில், உங்களுக்கு எந்த வகையான கார் தேவை என்பதை முடிவு செய்யுங்கள். இது உங்கள் பட்ஜெட், வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, வீட்டில் எத்தனை பேருக்கு கார் ஓட்ட தெரியும் போன்றவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். உங்களுக்கு SUV, Fortuner என பெரிய கார்கள் தொடங்கி ஸ்விப்ட், வேக்னார் என சிறிய கார்கள் வரை சாய்சில் உள்ளது. ஒரு காரைத் தேர்ந்தெடுத்த பிறகு, எந்த ஷோரூமில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பாருங்கள். மூன்று அல்லது நான்கு ஷோரூம்களுக்கு என்று விலையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் ஏதாவது கூடுதல் நன்மை வழங்கப்படும். சிறந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளை விற்பனையாளரிடம் கேட்பதில் எந்த தப்பும் இல்லை. இவற்றில் காரின் விலை, பதிவுச் செலவு, சாலை வரி, காப்பீடு, FASTag மற்றும் பிற கட்டணங்கள் அடங்கும்.
அடுத்த கட்டமாக காரை முன்பதிவு செய்யும் முன்பு சில விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். ஷோரூகள் உங்கள் காருக்கு சில கூடுதல் ஆபர்களை செய்து கொடுப்பதாக சொன்னால், அவற்றை கைப்படம் எழுதி வாங்கி கொள்ளுங்கள், இது மிகவும் முக்கியம். இப்படி செய்யவில்லை என்றால், டெலிவரி சயமத்தில் ஆபர்களை கார் நிறுவனங்கள் நிராகரிக்கலாம். முன்பதிவை ரத்து செய்ய நீங்கள் முடிவு செய்தால், டீலர்ஷிப் எவ்வளவு பணத்தைத் திருப்பித் தருவார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
காரை ஷோரூமில் இருந்து எடுக்கும் முன், முழுமையான ஆய்வு செய்யவும். உங்கள் பெயரில் கார் பதிவு செய்யப்படும் முன், காரில் ஏதேனும் கறைகள் அல்லது சேதம் உள்ளதா என்பதை பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் அது ஒருமுறை பதிவு செய்துவிட்டால், எதுவும் மாற்ற முடியாது. மேலும், காப்பீட்டு கொள்கையில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், பாலிசி வழங்குனரிடம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றத்தைக் கேட்டு கொள்ளலாம். சில மாநிலங்களில், தற்காலிக எண்ணைக் கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. டீலர்கள் உங்களிடம் பணம் செலுத்தும் ரசீதுகள் மற்றும் பிற அசல் ஆவணங்களை ஒப்படைத்திருப்பதை உறுதிசெய்யவும். மேலும், டெலிவரி நேரத்தில் காரில் உள்ள கூடுதல் பாகங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த காரை பதிவு செய்யும் முன், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் காரை திறம்பட ஓட்டி சோதித்து பாருங்கள். பின் இருக்கையில் சவாரி செய்வது எப்படி இருக்கிறது மற்றும் எத்தனை பேர் வாகனத்தில் வசதியாக அமரலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | யமஹாவின் தீபாவளி சலுகை..! FZ கனவை நனவாக்க ஒரு அருமையான வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ