முந்துங்கள் மக்களே... நாளையுடன் முடிகிறது தள்ளுபடி - அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அள்ளுங்கள்!

Smartphones In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் சேல் நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அதுவும் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 9, 2023, 05:27 PM IST
  • கடந்த அக். 8ஆம் தேதி விற்பனை தொடங்கியது.
  • ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கும் தள்ளுபடி உள்ளது.
  • நவ. 10ஆம் தேதியுடன் விற்பனை முடிகிறது.
முந்துங்கள் மக்களே... நாளையுடன் முடிகிறது தள்ளுபடி - அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அள்ளுங்கள்! title=

Smartphones In Amazon Sale 2023: அமேசான் நிறுவனம் இந்த பண்டிகை காலத்தில் மிக நீண்ட தள்ளுபடி விற்பனையை மேற்கொண்டு வந்தது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் தள்ளுபடி விற்பனை கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தசராவையொட்டியும் இந்த விற்பனை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, நவ. 10ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி நீட்டிக்கப்பட்டது. இந்தியாவின் நீண்ட பண்டிகை காலகட்டத்தையொட்டி அமேசானின் இந்த விற்பனை பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். 

அமேசான் கிரேட் இந்தியன் சேல் தள்ளுபடி விற்பனையில் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன் என வீட்டிற்கு தேவையான அனைத்து சாதனங்களும் நல்ல சலுகையில் கிடைத்தன. அனைத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இதில் தங்களின் பொருள்களுக்கு பல சலுகைகளையும் வழங்கின. வங்கிகள் சார்ந்தும் சில தள்ளுபடிகள் வழங்கப்பட்டது. பல கூப்பன் தள்ளுபடிகளும் இருந்தன. '

இந்நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2023 நாளை அதாவது நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. இந்த விற்பனை முடிவதற்குள் ஃபோன்களில் கிடைக்கும் அற்புதமான சலுகைகளைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சேமித்துக் கொள்ளலாம். அக்டோபர் தொடக்கத்தில் இருந்த இந்த விற்பனை நடைபெற்று வரும் நிலையில், பல ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகள் இன்னும் கிடைக்கின்றன. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இதில் காணலாம். அதாவது, பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | தீபாவளி 2023: 25,000 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்

Redmi Note 11T 5G

இந்த மொபைல் MediaTek Dimensity 810 Octa-core 5G பிராஸஸரில் இயங்குகிறது. இந்த போனில் 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது 50MP பிரதான கேமரா மற்றும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த மொபைலில் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை 12 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு 1000 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

Samsung Galaxy A14 5G

சாம்சங்கின் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி மொபைலில் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது 6.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மொபைலில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 14 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு 1000 ரூபாய் வரை தள்ளுபடி உள்ளது.

OPPO F23 5G

ஓப்போ நிறுவனத்தின் இந்த 5G மொபைல் 8 ஜிபி RAM உடன் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த மொபைல் 67W SUPERVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் 64MP பிரதான கேமரா மற்றும் 32MP முன்பக்க கேமரா உள்ளது. கைபேசியில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் விலை 22 ஆயிரத்து 999 ரூபாயாகும். போனுக்கு 1299 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு. 

Vivo Y56 5G

விவோ நிறுவனத்தின் Y56 5G மொபைலில் 128 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடனும், 8 ஜிபி வரை RAM உடனும் வருகிறது. கொண்டுள்ளது. ஃபோனில் 50MP டூயல் ரியர் கேமரா மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி உள்ளது. இதில் 6.58 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உள்ளது. போனின் விலை 16 ஆயிரத்து 999 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஐசிஐசிஐ கார்டுகளுக்கு 1000 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் பக்காவான டேப்லெட் - சிறப்பம்சங்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News