எச்சரிக்கை! உங்கள் மொபைலில் இந்த 19 ஆப்ஸ் இருந்தால் உடனே நீக்கவும்!
தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் 19 வகையான செயலிகளை நீக்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது, அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களிலுள்ள செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை குறிவைத்து பல சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக பலரின் மொபைல்களை ஹேக் செய்து தனிப்பட்ட தகவல்களை திருடிவிடுகின்றனர். மேலும் சைபர் குற்றவாளிகள் பலரும் மக்களை கவரும் வகையில் செயலிகளை உருவாக்கி அதை பதிவிறக்க வைத்து மக்களை தங்களது மோசடி வலையில் சிக்கவைத்து விடுகின்றனர். மேலும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயனர்களாக இருப்பதால், சைபர் குற்றவாளிகள் பல்வேறு ஆபத்தான பயன்பாடுகள் மூலம் அவர்களை குறிவைத்து வருகின்றனர். மால்வேர்ஃபாக்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, 'கடந்த பத்து வருடங்களில், ஆண்ட்ராய்டு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள இணைய தாக்குபவர்களுக்கு ஒரு மென்மையான இலக்காக மாறியுள்ளது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்
ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் போலல்லாமல் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியதாக உள்ளது. தீங்கிழைக்கும் பயன்பாடுகளைப் பயன்படுத்தி, ஆண்ட்ராய்டு சாதனத்தில் சைபர் கிரைமினல்கள் ஊடுருவுவது எளிதானதாக உள்ளது. ட்ரோஜான்கள், ஆட்வேர், ஸ்பைவேர், கீலாக்கர்கள் போன்ற பல மால்வேர்கள் மூலம் தவறுகள் நடைபெறுகிறது' என்று தெரிவித்துள்ளது. மேலும் சமீபத்திய ஆண்ட்ராய்டு வைரஸ்கள் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதவிர ஆண்ட்ராய்டு பயனர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்களது ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் 19 வகையான செயலிகளை நீக்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு வைரஸ்களை பொறுத்தவரையில், ஜோக்கர் ஸ்பைவேர், ஹார்லி ட்ரோஜன், ஃபேக் டால்பின், ஜின்மாஸ்டர், எக்ஸோபாட், ஆண்ட்ராய்டு போலீஸ் வைரஸ், ஃபேக்இன்ஸ்ட், பிளாக்ராக் மால்வேர், ஓப்ஃபேக் போன்ற பல வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் தீங்கிழைக்கும் பல செயலிகள் நீக்கப்பட்டு இருக்கிறது, இருப்பினும் சைபர் குற்றாவளிகள் வேறு பெயர்களில் தங்களது தீங்கிழைக்கும் செயலிகளை களமிறக்கி வருகின்றனர் என்பதால் மக்கள் செயலிகளை டவுன்லோடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட்போன்களிலிருந்து எந்த செயலிகளை நீக்க வேண்டும் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.
ஹார்லி ட்ரோஜன் கொண்ட ஆப்ஸ்: Fare Gamehub and Box, Hope Camera-Picture Record, Same Launcher and Live Wallpaper, Amazing Wallpaper, Cool Emoji Editor and Sticker.
ஜோக்கர் ஸ்பைவேர் கொண்ட ஆப்ஸ்: Simple Note Scanner, Universal PDF Scanner, Private Messenger, Premium SMS, Blood Pressure Checker, Cool Keyboard, Paint Art, Color Message.
ஆட்டோலைக்கோஸ் மால்வேர் கொண்ட ஆப்ஸ்: Vlog Star Video Editor, Creative 3D Launcher, Wow Beauty Camera, Gif Emoji Keyboard, Instant Heart Rate Anytime, and Delicate Messenger.
இந்த ஆப்ஸ்களில் பெரும்பாலானவை கூகுள் ப்ளே ஸ்டோரிலும் கிடைக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும் மற்றும் நீங்கள் எந்தவொரு செயலியையும் டவுன்லோடு செய்வதற்கு முன்னர் அந்த செயலி குறித்த கருத்துகளைத் தேடி அதனை நன்கு சரிபார்த்த பின்னர் டவுன்லோடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீங்கள் ஆன்டி-வைரஸ் ஆன்டி மால்வேர் சாஃப்ட்வேர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ