ATM Cash Withdrawal Rules: வங்கியில் காசு குறைவாக இருக்கிறதா... ATM பக்கம் போகாதீங்க - அப்புறம் அபராதம் தான்!
ATM withdrawal Rules Change: இனி வங்கிக்கணக்கில் பணமில்லாமல், ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்தால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ATM withdrawal Rules Change: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்ற சூழலில், ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால், கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த வங்கி உங்களுக்கு 10 ரூபாயும், அதன் ஜிஎஸ்டியையும் சேர்த்து அபராதமாக விதிக்கும். இந்த புதிய விதி வரும் மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,'வாடிக்கையாளரே, 2023ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல், போதுமான நிதி இல்லாததால் உள்நாட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பணம் எடுக்கத் தவறினால் ரூ.10 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்' என்று வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஏடிஎம் பரிவர்த்தனைகள் தவறினால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்பை அனுப்பத் தொடங்கியுள்ளது. வங்கியின் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செய்தி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | மக்களே உஷார்! அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 10,542 பேருக்கு பாதிப்பு!
உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இருந்தாலும், ஏடிஎம்மில் இருந்து பரிவர்த்தனை தோல்வியுற்றால் வாடிக்கையாளர்களின் இந்த சிக்கலை தீர்க்க பஞ்சாப் நேஷ்னல் வங்கி வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது, அவை:
1. ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால் புகாரின் தீர்வு புகார் பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் செய்யப்படும்.
2. பரிவர்த்தனை செய்த 30 நாட்களுக்குள் புகாருக்குத் தாமதமாகத் தீர்வு காணப்பட்டால், நாளொன்றுக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
3. ஏடிஎம்மில் பரிவர்த்தனை தோல்வியுற்றால், வங்கி வாடிக்கையாளர்கள் 0120-2490000 அல்லது 1800180222 மற்றும் 18001032222 என்ற கட்டணமில்லா எண்களில் வாடிக்கையாளர் தொடர்பு மையத்தில் புகார் செய்யலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியும் வாடிக்கையாளர்களிடம் சேவைகளின் திருப்தி குறித்து கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம், நீங்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்று அந்த வங்கியின் சேவைகளைப் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேவைகளில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள் கூறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ