இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணம். இது இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது.நிதி பரிவர்த்தனை செய்வதற்கு மட்டுமல்ல வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் பான் கார்டு அவசியம். வங்கி முதல் அலுவலகம் வரை, அது இல்லாமல் நிதி தொடர்பான எந்த பணியையும் செய்ய முடியாது என்ற நிலை தான் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது  எல்லா இடங்களிலும் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதன் கடைசி தேதி 2012 செப்டம்பர் 30ம் தேதி என இருந்த நிலையில், இப்போது 2022 மார்ச் மாதம் 31ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பான் கார்டு (PAN CARD) தொடர்பான ஒரு தவறுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்பதயும் அறிந்து கொள்ளுங்கள்.


நீங்கள் எங்கு எல்லாம் பான் எண்ணை உள்ளிடுகிறீர்களோ அங்கெல்லாம் பான் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள பத்து இலக்க பான் எண்ணை மிகவும் கவனமாக நிரப்பவும். இதில், எழுத்துப்பிழை அல்லது எண் மறினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.


ALSO READ | Aadhaar for Children: குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ


இதனுடன், இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தாலும், பெரிய அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் வங்கிக் கணக்கு கூட முடக்கப்படலாம். எனவே, உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், உடனடியாக உங்கள் இரண்டாவது பான் கார்டைத் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பான் கார்டு தொடர்பான ஒரு தவறுக்கு 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின்,  272B வது பிரிவின் கீழ்  கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.


ALSO READ | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த ஊழியர்களின் அகவிலைப்படியில் 14% அதிகரிப்பு!! 


மற்றொரு பான் கார்டை ஒப்படைக்கும் முறை


1. PAN கார்டை ஒப்படைக்கும் முறை எளிதானது. இதற்கு ஒரு பொதுவான படிவம் உள்ளது, அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.


2. இதற்கு, நீங்கள் வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவும்.


3. அதில்  'Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data'  என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படிவத்தை இப்போது பதிவிறக்கவும்.


4. இப்போது படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஏதேனும் NSDL அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கவும்.


5. இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கும் போது, ​​அதைப் படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.இதை ஆன்லைனிலும் செய்யலாம்.


ஒரே முகவரியில் ஒரே நபரின் பெயரில் வரும் இரண்டு வெவ்வேறு பான் கார்டுகள் இந்த வகையைச் சேர்ந்தவை என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை இன்றே சரண்டர் செய்ய வேண்டும்.


ALSO READ | இன்ஸ்டாகிராமில் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR