Aadhaar for Children: குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ

கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கலில், ஆதார் அட்டையின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 07:21 AM IST
  • UPA அரசாங்கம் நாட்டில் ஆதார் அட்டை திட்டத்தைத் தொடங்கியது.
  • அப்போதிருந்து, அனைத்து அரசாங்கங்களும் அதன் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
  • தற்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கிய பணியையும் இந்தியாவில் செய்ய முடியாது.
Aadhaar for Children: குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ  title=

Update on Aadhaar Card for Children: 2009 ஆம் ஆண்டில், அப்போதைய UPA அரசாங்கம் நாட்டில் ஆதார் அட்டை திட்டத்தைத் தொடங்கியது. அப்போதிருந்து, அனைத்து அரசாங்கங்களும் அதன் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  

கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கலில், ஆதார் அட்டையின் (Aadhaar Card) பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஹோட்டல் முன்பதிவு முதல் மருத்துவமனை வரை அனைத்து அரசு மற்றும் தனியார் இடங்களுக்கும் ஆதார் அட்டை பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கிய பணியையும் இந்தியாவில் செய்ய முடியாது. இது இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை முகவரிச் சான்றாக இருப்பதோடு மட்டுமல்ல, அரசின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையில் வந்துள்ள மாற்றம் என்ன? 

ஆதார் அட்டையின் தேவை அதிகரித்து வருவதால், குழந்தை பிறந்ததது முதலே, அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வாங்க வேண்டும் என பெற்றோர்கள் கவலைப்படத் தொடங்குகின்றனர். தற்போது விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுகும் இனி ஆதார் அட்டையை உருவாக்கலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.

ALSO READ | இனி ரயில் நிலையத்தில் ஆதார், பான் கார்டு பெறலாம்: இந்தியன் ரயில்வே அதிரடி

இப்போது குழந்தை பிறந்த உடனேயே குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை உருவாக்க முடியும். ஆதார் அட்டையை உருவாக்க பயோமெட்ரிக் தேவையில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் குழந்தையின் பயோமெட்ரிக் செய்யப்படும்.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையைப் பெற இந்த ஆவணங்கள் தேவை:

- ஆதார் அட்டையைப் பெற, குழந்தை இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

- குழந்தையுடன், அதன் பிறந்த தேதி சான்றிதழையும் வைத்திருப்பது அவசியம். இதனுடன் முகவரிச் சான்றும் (Address Proof) இருக்க வேண்டும்.

- இதற்குப் பிறகு பெற்றோரின் ஆதார் அட்டையையும் வைத்திருப்பது அவசியம்.

- குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருக்க வேண்டும்.

- அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA), உறவுச் சான்று (POR) மற்றும் பிறந்த தேதி (DOB) போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவை.

- இதற்குப் பிறகு, அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, பின்னர் குழந்தையின் ஆதார் அட்டை  உருவாக்கப்படும். 

ALSO READ | Aadhaar Update: ஆதார் e-KYC கட்டணத்தில் முக்கிய மாற்றம்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News