ஓய்வூதியம் பலரது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது.  பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, மீதமுள்ள வாழ்க்கை வாழ இந்த பணம் பெரிதும் உதவுகிறது. பெரும்பாலும் ஓய்வு பெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இதுவே தான் வழி. 60 முதல் 80 வயது வரை உள்ள ஒவ்வொருவரும் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற ஜீவன் பிரமான் பத்ராவைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.  2023 ஆம் ஆண்டுக்கான வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும், இது 80 வயது வரை உள்ள மூத்த ஓய்வூதியம் பெறுபவருக்கும் பொருந்தும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஜீவன் பிரமான் பத்திரத்தைச் சமர்ப்பிக்கத் தவறினால், ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும். இருப்பினும், அடுத்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன் இந்த சான்றிதழைச் சமர்ப்பித்தால், ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட காலத்தில் தவறவிட்ட தொகையுடன் ஓய்வூதியம் மீண்டும் தொடங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா! இந்தியா எடுத்த முக்கிய முடிவு


வாழ்க்கை சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது?


ஜீவன் பிரமான் என்பது 2014 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் திட்டமாகும். ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜீவன் பிரமான் திட்டம் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை ஆன்லைனில், மொபைல் செயலி மூலமாகவோ அல்லது நியமிக்கப்பட்ட ஜீவன் பிரமான் மையத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் ஓய்வூதியதாரர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்துகிறது.


இந்தியாவில் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க ஐந்து வழிகள் உள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொருவரும் அதை ஜீவன் பிரமான் போர்ட்டல், போஸ்ட் பேமெண்ட் வங்கி, முக அங்கீகாரம், நியமிக்கப்பட்ட அதிகாரி கையொப்பம் மற்றும் வீட்டு வாசலில் வங்கி மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த முறைகள் தொழில்நுட்ப அணுகல் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களின் பல்வேறு நிலைகளை பூர்த்தி செய்கின்றன.  டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைத் தவிர, ஓய்வூதியம் பெறுவோர், வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்கள் போன்ற அந்தந்த பிடிஏக்களில் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். இந்த முறையானது ஆதார் அட்டை மற்றும் ஓய்வூதியம் செலுத்தும் ஆணை போன்ற ஆதார ஆவணங்களுடன் அசல் வாழ்க்கைச் சான்றிதழ் படிவத்தை PDA இன் கவுன்டரில் சமர்ப்பிக்கும்.


வாழ்க்கைச் சான்றிதழை முக அங்கீகாரம் மூலம் சமர்ப்பிக்க


- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 'AadhaarFaceRD' 'Jeevan Pramaan Face App' ஐ நிறுவவும்.


- உங்கள் ஆதார் எண்ணை ஓய்வூதிய விநியோக அதிகாரியிடம் கொடுக்கப்பட வேண்டும்.


- ஸ்மார்ட்போனில் அங்கீகாரத்திற்குச் சென்று முகத்தை ஸ்கேன் செய்யவும்.


- பிறகு விவரங்களை உள்ளிடவும்.


- உங்கள் படத்தைப் அதில் பதிவேற்றவும். உங்களின் வாழ்க்கைச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ள, கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும்.


வீட்டு வாசல் வங்கி மூலம் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது?


- ஜீவன் பிரமான் மையம் அல்லது வங்கிக்கு உங்கள் வருகையை பதிவு செய்யவும்


- உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்களை ஆபரேட்டரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்


- பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி ஆபரேட்டர் உங்கள் ஐடியைச் சரிபார்ப்பார்.


-  அங்கீகாரத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கைச் சான்றிதழ் பெறப்படும்.


மேலும் படிக்க - India Vs Canada: இந்தியா கனடா விசா மோதல்களும் முடிவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ