தமிழ் சின்னத்திரையின் பெரிய நடிகை, ஆலியா மானசா. ராஜா ராணி என்ற தொடர் மூலம் வென்பாவாக பலரது இதயங்களில் குடிகொண்டார். இதையடுத்து தன்னுடன் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவை 2019ஆம் ஆண்டு செய்து திருமணம்  கொண்டார். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இவர், தனது முதல் குழந்தையின் பிறப்பிற்கு பிறகு கொஞ்சம் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அவர் எப்படி குறைந்த நாட்களிலேயே இவ்வளவு எடை குறைந்தார் என பலர் ஆச்சரியப்பட்டனர். அதன் பிறகு ஆலியாவே தனது சீக்ரெட் டிப்ஸை அனைவருக்கும் பகிர்ந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலியாவின் சீக்ரெட் டிப்ஸ்:


எல்லோரும் உடல் எடையை இழப்பதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்வார்களாே, அதையே ஆலியாவும் மேற்கொண்டுள்ளார். ஆனால், தன்னால் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கையாேடும் உறுதியோடும் அவர் இந்த முயற்சியில் இறங்கியதால் அவரால் சீக்கிரமாகவே உடல் எடையை குறைக்க முடிந்தது. சரி, அவர் உடல் எடையை குறைக்க பின்பற்றி வழிமுறைகள் என்னென்ன தெரியுமா? 


மேலும் படிக்க | Actor Vikram: இத்தனை வயதிலும் இவ்வளவு இளமை..விக்ரமின் கட்டுமஸ்தான உடலிற்கு ‘இந்த’ டயட்தான் காரணமா?


3 மணி நேர உடற்பயிற்சி:


வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஆலியா அதிக நேரம் உடற்பயிற்சி செய்வாராம். ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணி நேரமாவது தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தவர் இவர். காலை 6 மணி முதல் 9 மணி வரை அவர் உடற்பயிற்சி செய்வாராம். உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க அவர் இவ்வகையான முயற்சிகளை பின்பற்றினாராம்.


1 மணி நேர பாக்ஸிங்:


ஆலியா மானசா, தொடர்ந்து ஒரு மணி நேரம் பாக்ஸிங் பயிற்சியிலும் ஈடுபட்டாராம். பாக்ஸிங் ட்ரைனர் ஒருவரின் உதவியாேடு தினமும் இந்த பயிற்சிகளை அவர் மேற்கொள்வாராம். இதனால் அவரது கையில் இருந்த தசைகள் குறைந்து மிகவும் ஃபிட் ஆக ஆனாராம். 


சீரக தண்ணீர்:


பிரசவத்திற்கு பிறகு அனைத்து தாய்மார்களுக்கும் தொப்பை விழுவது இயல்பான ஒன்று. இதுவே ஆலியாவிற்கு நடந்தது. இதைக்குறைப்பதற்காக உடற்பயிற்சிகளை மட்டும் எடுத்து கொள்ளாமல் சீரக தண்ணீரையும் அருந்தி வந்தாராம் ஆலியா. சீரகத்தை ஊறவைத்து பின்பு அதை கொதிக்க வைப்பாராம். அப்படி கொதிக்க வைத்த அந்த நீரை தினமும் 3 லிட்டர் அளவிற்கு அருந்துவாராம். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை குறையும் எனவும் சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைப்பு? 


ஆலியா மானசா, குழந்தை பிறப்பிற்கு பிறகு உடற்பயிற்சி மேற்கொள்கையில் 65 கிலோ இருந்தாராம். இப்போது உடற்பயிற்சியினால் ஒரே மாதத்தில்  10 கிலோ எடையை குறைத்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறப்பிற்கு பிறகும் ஆலியா ஒல்லியான தோற்றத்திலேயே காணப்படுகிறார். இது, எப்படி என்ற கேள்விக்கு அவர் சிம்பிளான ஒரு பதிலை கொடுக்கிறார். காலையில் எழுந்ததும் முதல் வேளையாக சோம்பு மற்றும் வெந்தையம் ஆகியவற்றை தண்ணியில் ஊறவைத்து குடிப்பாராம். இந்த தண்ணீரையே நாள் முழுக்க அருந்துவாராம். இது, உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும் என்கிறார்கள் ஹெல்த் பிரியர்கள். 


மேலும் படிக்க | Sara Ali Khan: சில மாதங்களிலேயே 40 கிலேயா எடையை குறைத்த சாரா அலி கான்..சீக்ரெட் இதுதானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ