மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆல்யா, நடுரோட்டில் லவ் டுடே பாடலுக்கு ஆட்டம்

தற்போது ஆல்யா மானசா இனியா என்ற புது தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் இன்று அதாவது திங்கள்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 5, 2022, 11:27 AM IST
  • புது சீரியலில் ஆல்யா மானசா.
  • ஆல்யா மானசா நடனம் வைரல்.
  • ஆல்யா போட்ட அதிரடி குத்து.
மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆல்யா, நடுரோட்டில் லவ் டுடே பாடலுக்கு ஆட்டம் title=

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறினார்கள். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பமான ஆல்யா நடிப்புக்கு பிரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். அதன்பிறகு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உடல் எடை கூடிய அவர், சட்டென எடையை குறைத்து மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கமிட் ஆனார். அடுத்த சில மாதங்களில் இரண்டாவதாக கர்ப்பமான ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். 

கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா மானசா உடல் எடை கூடி இருக்கிறார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி மக்களிடம் உரையாடிக்கொண்டே தான் இருந்தனர். இதற்கிடையில் சமீபத்தில் ஆல்யா, தான் சீரியலில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். அந்தவகையில் இவர் தற்போது நடிக்க உள்ள சீரியலின் பெயர் இனியா ஆகும். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது, அத்துடன் இந்த சீரியலை சரிகம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த தொடர் இன்று அதாவது திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க | பாலாவுக்கு பலத்த அடி?... வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா... என்னதான் நடந்தது?

இந்த நிலையில் தற்போது நடிகை ஆல்யா நடுரோட்டில்  குத்தாட்டம் போடும் வீடியோ இன்று வைரலாகி வருகின்றது. இதனை வீடியோவாக எடுத்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.அத்துடன் ரசிகர்கள் ஆல்யாவின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதற்கிடையில் இனியா நாடகத்தின் படப்பிடிப்பில் தன் தோழியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவும் தற்போது வெகுவாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

மேலும் படிக்க  | பூஜையுடன் தொடங்கும் தளபதி 67! லோகி யூனிவெர்சில் உருவாகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News