மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்: வெற்றியின் மாலையை கழட்ட சக்தி போட்ட திட்டம் பலித்ததா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 12:53 PM IST
  • வெற்றி சபரிமலைக்கு மாலை போடுகிறான்.
  • சக்தி வெற்றியின் மாலையை கழட்ட திட்டம் போடுகிறாள்.
  • சக்திக்கு ட்விஸ்ட் வைக்கிறான் வெற்றி.
மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்: வெற்றியின் மாலையை கழட்ட சக்தி போட்ட திட்டம் பலித்ததா? title=

தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. மங்கைகள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதைதான் இதன் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடத்தை பிடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை என்னென்ன தெரியுமா? 

இதுவரை நடந்தது…

சக்தி வெற்றி இருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று, பேச முற்பட, வெற்றி விலகி செல்கிறான். அதன் பிறகு வெளியே கிளம்பும் வெற்றிக்கு சக்தி வாசல் வரை சென்று வழி அனுப்பி இன்று நமக்கு முதலிரவு சீக்கிரமாக வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பிறகு வெற்றிக்காக சக்தி காத்திருக்கிறாள். சக்தி தன் அறையை முதலிரவு அறையை போல அலங்கரிக்க, இதை பார்த்த வெற்றி ஏதோ யோசித்தவாறு அங்கிருந்து செல்கிறான்.

மாலை போட்ட வெற்றி

சரண்யா சக்தியிடம் வந்து, வெற்றி சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் விஷயத்தை சொல்ல, நான் சாமியாகி விட்டேன் என்று வெற்றி 
சக்தியை கலாய்க்கிறான். வெற்றி மாலை போட்டுக்கொண்ட விஷயத்தை கேள்விபட்டு அதிர்ந்து போகும் சக்தி, ஒவ்வொறு முறையும் வெற்றியுடன் பேச வரும் போதும் சாமி சரணம் என்று சொல்லி வெற்றி விலகி போகிறான்‌. இப்படி காமெடியான ட்விஸ்டுடன் நேற்றைய மீனாட்சி பொண்ணுங்க தொடரில் அடுத்து நடக்கவிருப்பது என்ன தெரியுமா? 

மேலும் படிக்க | வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு

இன்றைய எபிசோட் அப்டேட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் வெற்றி ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வந்திருக்க, வெற்றி வேண்டுமென்று தான் இப்படி செய்கிறான் என்ற முடிவுடன் சக்தி சங்கிலிக்கு போன் செய்கிறாள். 

Meenakshi Ponnunga

அவனிடம் அன்று உன்னை வெற்றி மார்க்கெட்டில் அடித்து விட்டான் ஆனால் இப்போது வந்தால் நீ அவனை அடிக்கலாம் அவன் சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கிறான் என்று போட்டுக் கொடுக்கிறாள்.

உடனே சங்கிலி வெற்றியின் வீட்டிற்கு வந்து, வேண்டும் என்றே வெற்றியிடம் வம்பு சண்டை இழுக்கிறான். இதனால் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு கோபம் அதிகமாகிவிட வீட்டுக்குள் சென்று மாலையை கழற்றி பால் சொம்பில் போட்டுவிட்டு வந்து சங்கிலியை அடிக்கிறான்.

கல்யாண தரகரை அழைக்கும் வெற்றி..

சக்தியை வெறுப்பேற்றுவதற்காக வெற்றி ஒரு கல்யாண புரோக்கரை வர சொல்லி தனக்கு பெண் பார்க்க சொல்கிறான். சக்தி வெற்றியிடம் சண்டை போட அவன் நான் பூஜாவை தான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னேன் வேறு பெண்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே, என்று ஷாக் கொடுக்கிறான். மேலும் பெண் பார்க்க போவதற்காக தன் அறைக்கு சென்று புது டிரஸ் கூலிங் கிளாஸ் போட்டு தயாராாகிறான்.

காணத்தவறாதீர்கள்..

வெற்றி உண்மையாகவே இன்னொரு பெண் பார்க்கப்போகிறானா? சக்தி அடுத்து என்ன செய்ய போகிறாள்? போன்ற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் பதில்கள் இருக்கும். இப்படி காமெடி கலந்த விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அஜித் ரஜினிக்கு பாடல் எழுத யார் காரணம்? பிச்சைக்காரன்2 பாடலாசிரியர் அருண் பாரதி பளிச் பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News