International Flight Tickets Offer: நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய நினைத்தால், உங்களுக்காக ஒரு சிறந்த சலுகை உள்ளது. வெறும் 9 ரூபாய்க்கு விமானத்தில் பயணம் செய்யலாம். அதுவும் சர்வதேச சுற்றுப்பயணம். ஆம்..இந்தியாவிலிருந்து வியட்நாம் வரை வெறும் 9 ரூபாயில் பயணிக்கலாம். சர்வதேச விமான நிறுவனமான வியட்ஜெட் 9 ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 26 வரை செல்லுபடியாகும். அதாவது, ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 26-க்குள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு செய்தால், இந்த பொன்னான வாய்ப்பைப் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்வதற்கு வியட்ஜெட் நிறுவனம் 30,000 விளம்பர டிக்கெட்டுகளை வழங்குவதாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விமான நிறுவனமான வியட்ஜெட் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை 9 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதற்காக ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரையிலான பயணங்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 26 வரை முன்பதிவு செய்யலாம். ஏர்லைன் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 26 வரை ஒவ்வொரு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது விளம்பர டிக்கெட்டுகளுக்கான உரிமையை நீங்கள் பெறலாம்.


மேலும் படிக்க: பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!


விமான நிறுவனமான வியட்ஜெட்டின் வணிக இயக்குனர் ஜெய் எல் லிங்கேஷ்வர் வியாழன் அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே 17 வழித்தடங்களுக்கு வியட்ஜெட் நேரடி விமானங்களை இயக்கும். இந்தியாவின் முக்கிய இடமான தென்கிழக்கு ஆசியா (பாலி, பாங்காக், சிங்கப்பூர், கோலாலம்பூர்), வடகிழக்கு ஆசியா (சியோல், பூசன், டோக்கியோ, ஒசாகா, தைபே) மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தியத்துடன் இணைக்கவும் திட்டம் போட்டுள்ளது. 


ஐந்து முக்கிய இந்திய நகரங்களில் இருந்து விமான பயணிகள், அழகான நகரமான டா நாங், ஹோய் ஆன், ஹியூ இம்பீரியல், மை சன் சரணாலயம் மற்றும் உலகின் மிகப்பெரிய குகை சோன் டூங் உள்ளிட்ட அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் நேரடியாக பயணம் செய்யலாம். விசா நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இனி தூதரகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது அதிக எண்ணிக்கையில் வியட்நாம் சென்று வர ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. கோவிட் நோய்க்குப் பிறகு சராசரியாக விசாக்களின் எண்ணிக்கை 24 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது முன்பு ஒரு நாளைக்கு 250 விசாக்கள் என இருந்த எண்ணிக்கை தற்போது 6,000 விசாக்களாக அதிகரித்துள்ளது.


மும்பை மற்றும் புது டெல்லியை டா நாங்குடன் இணைக்கும் முதல் இரண்டு நேரடி சேவைகளை அக்டோபர் 17 மற்றும் 18 முதல் VietJet தொடங்கும். நவம்பர் 28, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்தில் இருந்து டா நாங்கிற்கு மேலும் மூன்று வழித்தடங்களை விமான நிறுவனம் தொடங்கும். புது தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்தில் இருந்து வியட்நாமின் பொருளாதார மற்றும் சுற்றுலா மையங்களான ஹோ சி மன்ஹி சிட்டி, ஹனோய், டா நாங், ஃபூ குவோக் ஆகிய இடங்களுக்கும் விமானத்தின் கூடுதல் சேவைகள் இந்த செப்டம்பரில் தொடங்கும்.


மேலும் படிக்க: Post office scheme: ரூ.12,000 முதலீட்டில் ரூ.1 கோடி வரை பெற அறிய வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ