அசத்தலான Apple iPad Pro, இப்போது இந்தியாவில், சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விபரம்
புதிய Apple iPad Pro என்னும் பல புதிய சிறப்பம்சங்களை கொண்ட ஐபேட் ஒன்றை ஆப்பிள் (Apple) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது புதிய ஆப்பிள் ஐபாட் புரோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Apple iPad Pro என்னும் பல புதிய சிறப்பம்சங்களை கொண்ட ஐபேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் உங்கள் இதயத்தை வெல்லும் என்னும். இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில் ஆப்பிள் ஐபாட் புரோ மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 11 அங்குல திரை அளவுடன் உள்ள 128 ஜிபி மாடலின் விலை ரூ .71,900, 256 ஜிபி மாடல் ரூ .80,900 க்கும், 512 ஜிபி மாடல் 98,900 என்ற விலையிலும் கிடைக்கும்
11 அங்குல மாடலில் 11 அங்குல லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேயில் (2388x1668) பிக்சல்கள்கொண்டது. மேலும் இதில் ப்ரோமோஷன், பி 3 வயில் கலர் மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இது HDR மற்றும் Dolphy விஷன் சப்போர்ட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. 12.9 அங்குல மாடலில் 10,000 க்கும் மேற்பட்ட LED-க்களுடன் லிக்விட் ரெடினா XDR Mimi-LED டிஸ்ப்ளே உள்ளது. HDR அம்சத்திற்கான அதிகபட்ச ப்ரைட்நெஸ் 1600 நிட்ஸ் வரை இருக்கும். USB வகையில், -சி போர்ட், இப்போது தண்டர்போல்ட் மற்றும் USB 4 ஆகும்.
ALSO READ | Alert: WhatsApp பயனர்கள் செய்யும் சில தவறுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்
புதிய ஐபாட் புரோ 8 கோர் வகையில் ஆப்பிள் M 1 சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. தண்டர்போல்டட் கனெக்டிவிடியை ஆப்பிள் வழங்கியுள்ளது. புதிய ஐபாட் புரோவில் ஆப்பிள் நிறுவனம் 5 ஜி இணைப்பு வழங்கப்படுகிறது. கேமராவை பற்றி பேசும் போது, ஐபாட் புரோ இரட்டை லென்ஸ் 9) கேமரா அமைப்புடன் வருகிறது. ஐபாட் புரோ ட்ரூடெஃப் கேமராவுடன் வருகிறது. இதில், பேஷியல் ரெகாக்னிஷன் அம்சமும் உள்ளது
128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் 8 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி மற்றும் 2 டிபி ஸ்டோரேஜ் வகைகளில் 16 ஜிபி ரேம் கிடைக்கும். கனெக்டிவிடியை பொறுத்தவரை, நீங்கள் வைஃபை 6 மற்றும் புளூடூத் பதிப்பு 5 போன்ற அம்சங்களைக் காண்பீர்கள். புதிய ஆப்பிள் ஐபாட் புரோ மேஜிக் கீ போர்ட் மற்றும் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.
ALSO READ | இனி, Google Pay, Paytm செயலிகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR