Wrinkles Home Remedies: வயது ஏற ஏற ​​முகத்தில் சில வயதான அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். பொதுவாக பெண்கள் முகத்தில் வயதான அறிகுறிகளைக் காண விரும்புவதில்லை, ஆனால் முதுமையை நம்மால் நிறுத்தவே முடியாது. ஆனால் இவற்றை நம்மால் தாமதம் படுத்த முடியும். இதற்கு சரியான முறையில் சருமத்தை பராமரித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தோல் தளர்வதைத் தடுக்க உதவலாம். இதை நீக்கும் பல கிரீம்கள் மற்றும் தோல் பராமரிப்பு சிகிச்சைகள் உள்ளன. ஆனால், அவற்றில் கட்டாயம் பலன் கிடைக்குமா என்று கூற முடியாது. அதேபோல் இந்த பொருட்களில் ரசாயனங்களும் நிறைந்திருக்கலாம். இதனால் சருமம் சேதமடையலாம். அத்தகைய சூழ்நிலையில், வீட்டு வைத்தியம் மிகவும் சரியான மற்றும் பாதுகாப்பான முயற்சி ஆகும். இவை சிறந்த பலனைத் தருவது மட்டுமின்றி சருமத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் வீட்டி வைத்தியம் எவை என்று தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகப்பருவை நீக்க வீட்டு வைத்தியம் | ( How to Use Coconut Oil for Wrinkles):
உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இந்த பேக்கின் செயல்முறை பற்றி அறிந்துக்கொள்வோம்.


மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்


தேவையான பொருட்கள்:
மஞ்சள்
தேங்காய் எண்ணெய்


மேலும் படிக்க | சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவே இருக்கா, இந்த வீட்டு வைத்தியம் போதும்


செயல்முறை:
இந்த பேஸ்ட்டைத் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முதல் 4 ஸ்பூன் மஞ்சளைச் சூடாக்கி கொள்ளவும். மஞ்சள் நன்கு கருப்பாகும் வரை சூடாக்கவும்வறுக்கவும். மஞ்சள் முழுவதுமாக சூடானதும், ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை காட்டன் வைத்து முகம் முழுவதிலும் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும். உலர்த்திய பின் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சிறந்த முடிவு பெற வேண்டுமானால், இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை தடவவும்.


ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய்


தேவையான பொருட்கள்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 தேக்கரண்டி 
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி 


செய்முறை:
ஆப்பிள் சீடர் வினிகரில் தேங்காய் எண்ணெயைக் கலந்து முகத்தை மசாஜ் செய்யவும். உங்கள் முகத்தை குறைந்தது 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த வீட்டு வைத்தியத்தை கடைப்பிடிக்க இரவு நேரமே சிறந்தது.


தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர்


தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
ரோஸ் வாட்டர்


செய்முறை:
தேங்காய் எண்ணெயில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். இதற்குப் பிறகு முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சரும பளபளக்க இந்த 5 ஆயுர்வேத பொருட்கள் போதும், உடனடி பொலிவு பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ