மத்திய அரசின் IREL நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. IREL நிறுவனம் அணு சக்தி அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. அணு மினரல்களை சுரங்கம் அமைத்து உற்பத்தி செய்யப்படுகிறது. இல்மனைட், ரூட்டில், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்ற தாதுகளை உற்பத்தி செய்கின்றனர்.
தொழிற்பயிற்சி விவரங்கள்:
Executive(HR) - 03,
Executive(Marketing) - 02,
Executive(Finance &Accounts) - 02,
சம்பளம்; தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
வயது வரம்பு:
தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
தொழிற்பயிற்சிக்கு MBA (HRM)/ MA (IR & PM, MBA (Marketing),CA/ICWA/ MFC/ MBA(Finance & Accounts) அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழு நேரப் பிரிவில் எம்.பி.ஏ பெற்றிருக்க வேண்டும்.
தொழிற்பயிற்சி காலம் :
IREL நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டத்தாரிகளுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும்
தேர்வு முறை:
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தால் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் பரிசோதனைக்காக அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தொழிற்பயிற்சியாவார்கள் கண்டிப்பாக http://www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
https://www.irel.co.in/careers என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்க செய்ய : https://www.irel.co.in/careers
தபால் மூலம் அனுப்ப வேண்டும் முகவரி:
The Dy. General Manager (HRD),
IREL(India) Limited
Plot No 1207,Veer Savarkar Marg, Opp Siddhi Vinayak Mandir
Mumbai, Maharashtra-400028
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.