புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...


மேஷம்: செயல்பாடுகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படும். கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடும். வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்கவும்.


ரிஷபம்: நண்பர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.


மிதுனம்: மனதில் மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் வருகையால் லாபகரமான சூழல் அமையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.


கடகம்: கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் பழைய சரக்குகளால் லாபம் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். உயர் பதவியில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும்.


சிம்மம்: திரவியம் சம்பந்தமான தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனைவி வழி உறவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.


Also Read | 99 SONGS திரைப்படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மானை தூண்டியது மணிரத்தினமா?


கன்னி: பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். புதிய தொழில் மேற்கொள்வதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.


துலாம்: தொழிலில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.


விருச்சகம்: தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களால் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது சிறப்பு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணிய முயற்சியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


தனுசு: எதிர்பாராத சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் பேசவும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணங்கள் தெளிவு பெறும். வாகன வசதிகள் மேம்படும் .


Also Read | கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்


மகரம்: நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் கிடைக்கும்.


கும்பம்: மனதில் எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.


மீனம்: பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். புண்ணிய காரியங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பலரின் ஆதரவு கிடைக்கும்.
எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


Also Read | Tripathi Balaji:  திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR