மூவி லவ்வரா நீங்க? உங்க கிட்ட ‘இந்த’ பிரச்சனை இருக்கலாம்..ஜாக்கிரதை!
படம் பார்க்க பிடிப்பவர்களுக்கு, மனதிற்குள் சில தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
நமது நண்பர்கள் குழுவில், நம்முடனேயே ஒரு நண்பர் இருப்பார். அவரிடம் எந்த படத்தை பற்றி கேட்டாலும், அது குறித்து தெரியும். ஒரு படத்தின் விமர்சனத்தை கூறுவதில் இருந்து, அந்த படத்தின் இயக்குநர் ஏன் அப்படிப்பட்ட கதையை எழுதினார் என்பது வரை அவர்களுக்கு தெரிந்திருக்கும். உலக சினிமா முதல், உள்ளூர் சினிமா வரை அனைத்தையும் பார்த்து கரைத்து குடித்து வைத்திருக்கும் அவர்களை பார்க்கும் போது, நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படிப்பட்ட சினிமா லவ்வர்களிடம் சில பிரச்சனை இருக்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
பதற்றம் மற்றும் கவலை:
திரைப்படங்களை அதிகமாக பார்ப்பவர்களுக்கு, பதற்றமான அல்லது கவலையான மனநிலை இருக்கலாம். அதிலிருந்து தப்பிக்க அவர்கள் அதிகமான படங்களை பார்க்கலாம். இப்படி படங்கள் பார்ப்பது நாம் எதை நினைத்து அதிகமாக கவலை அல்லது பதற்றப்படுகிறோமோ, அதிலிருந்து தற்காலிக விடுப்பு அளிக்கும்.
சலிப்புணர்வு:
பலருக்கு வாழ்க்கை ஒரே மாதிரி செல்வதாலோ, அல்லது வாழ்வில் பிடிமானம் இல்லை என்றாலோ சலிப்பான உணர்வு ஏற்படும். ஏதேனும் ஒன்று நமக்கு பொழுதுபோக்காக அமைய வேண்டும் என அவர்கள் யோசிப்பர். இதனால், அதிகமாக படங்களை பார்ப்பார்கள்.
தனிமை உணர்வு:
ஒரு சிலருக்கு, வாழ்வில் தனிமை வாட்டி வதைக்கும். தன்னை சுற்றி 1000 பேர் இருந்தாலும் தான் தனியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அவர்கள், அந்த உணர்வில் இருந்து தப்பிக்க, கதைகளின் மூலம் ஒரு இணைப்பை தேடுவர். அந்த கதைகளில் வரும் கதாப்பாத்திரம் தன்னை போல் இருக்கிறதா, அந்த கதை தன் வாழ்க்கையை போல் இருக்கிறதா என்பதை பார்ப்பர். இப்படிப்பட்ட நபர்களும் அதிகமாக படங்களை பார்ப்பர்.
உணர்ச்சிகளில் இருந்து தப்பிக்க..
இங்கு பலர், தன் இதயத்தை நொறுக்கும் அளவிற்கு ஒரு விஷயம் தனக்கு நேரும் போது, அதை எதிர்கொள்வதை விட்டுவிட்டு, அதை பற்றி யோசிக்காமல் இருக்க வேறு சில விஷயங்களை நோக்கி சென்று விடுவர். அப்படி அவர்கள் செல்லும் ஒரு விஷயம், திரைப்படங்களாக இருக்கும். தன் வாழ்வில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு சோகத்தை மறக்க, அல்லது அதை பற்றி நினைக்காமல் இருக்க அவர்கள் திரைப்படங்களை நாடுவர்.
மேலும் படிக்க | கையில் காசே இல்லாமல் பயணம் செய்வது எப்படி? சூப்பரான எளிய வழிகள்...
தினசரி வாழ்க்கையில் இருந்து விடுப்பு..
9-5 வேலைக்கு செல்லும் பலரது வாழ்க்கை ஒரு இயந்திரத்தின் வாழ்க்கை போல ஆகிவிடும். காலையில் எழுவதும் இரவு உறங்க செல்வதும் வேலைக்கு செல்லத்தான் என்ற நிலை வந்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சிலர் தொடர்ந்து படங்களை பார்ப்பார்கள்.
இயல்பு வாழ்க்கையில் ஏமாற்றம்:
திரைப்படங்களும், இயல்பு வாழ்க்கையும் ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்டாத இடத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். கற்பனை திறன் அதிகம் கொண்டவர்கள், பல சமயங்களில் இயல்பு வாழ்க்கையால் ஏமாற்றம் அடைகின்றனர். இதிலிருந்து தப்பிக்க, சாகசம், காதல், மாயாஜாலம் நிறைந்த கதைகளை பார்க்கின்றனர். இதனால் அப்படிப்பட்ட படங்களுக்கு அடிமையாகவும் ஆகின்றனர்.
தோல்வி பயம்:
பலர், தங்கள் வாழ்வில் சில விஷயங்களை கடக்க வேண்டும் என்ற முடிவுடன் இருப்பர். ஆனால், அந்த விஷயங்களில் தோற்று விடுவோமோ என்ற பயத்தால் அது குறித்து முடிவெடுக்காமலேயே இருப்பர். படத்தில் வரும் கதாப்பாத்திரம் ஏதேனும் இது போன்ற தோல்விகளை கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஒரு வித சிலிர்ப்புணர்வு உண்டாகும். இதற்காக சிலர், படங்களை பார்க்கின்றனர்.
மேலும் படிக்க | நைட் ஷிப்ட்டில் வேலை பார்ப்பதால் ஆண்மை குறையுமா? என்னங்க சொல்றீங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ