Day Dreaming: வாழ்க்கையில் முன்னேற பகல் கனவு காணுங்க... ஆனால், அளவோடு.. !

Day Dreaming: பல நேரங்களில் நாம் அடைய விரும்பும் விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அது நமக்கு பிடித்த உணவு, வீடு அல்லது பிடித்த வேலை, வாழ்க்கையில் அடைய விரும்பும் குறிக்கோள்கள் என எதுவாகவும் இருக்கலாம் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2024, 11:35 AM IST
  • நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள்.
  • பகல் கனவு படைப்பாற்றலை அதிகரிக்க உதவும்.
  • பெரும்பாலும் கனவுகளின் உலகில் நாம் தொலைந்து போகிறோம்.
Day Dreaming: வாழ்க்கையில் முன்னேற பகல் கனவு காணுங்க... ஆனால், அளவோடு.. ! title=

Day Dreaming: பல நேரங்களில் நாம் அடைய விரும்பும் விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அது நமக்கு பிடித்த உணவு, வீடு அல்லது பிடித்த வேலை, வாழ்க்கையில் அடைய விரும்பும் குறிக்கோள்கள் என எதுவாகவும் இருக்கலாம் . ஆனால் பெரும்பாலும் கனவுகளின் உலகில் நாம் தொலைந்து போகிறோம், நிஜ வாழ்க்கையிலிருந்து நம்மைத் தூர விலகி விடுகிறோம். இரவில் மட்டுமல்ல, பகலில் அமர்ந்து உங்கள் கனவுகளிலும் கற்பனை உலகிலும் தொலைந்து போவதும் கனவுதான். இது பகல் கனவு என்று அழைக்கப்படுகிறது.  

நடப்பதற்கு சாத்தியம் இல்லாத ஒரு விஷயத்தை, ‘பகல் கனவு காண்பது’ என்று சொல்வார்கள். எனினும், பகல் கனவு காண்பது ஒருவரின் ஞாபக சக்தி, படைப்பாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும் என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பகல் கனவு காணும் போது மனித மூளை (Brain Health) மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று கூறும் நிபுணர்கள், எப்போதும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர கதியிலான வாழ்வில் பகல் கனவு  நமது கவலை அல்லது சோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை குறைக்கிறது என கூறுகின்றனர்.

பகல் கனவு படைப்பாற்றலை அதிகரிக்க உதவும். பிரச்சனைக்கான தீர்வுகளை கொடுகக்லாம். வெவ்வேறு கண்ணோட்டங்களை கருத்தில் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. மனதை ரிலாக்ஸ் செய்து, மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். இது அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.பகல் கனவுகள் என்பவை நம் மனதின் ஆழமான ஆசைகளையும், குறிக்கோள்களையும் பிரதிபலிக்கும் ஒரு மனநிலையாக இருக்கும் நிலையில், நமக்கு புதிய சிந்தனைகளையும், சாத்தியங்களையும் கொடுக்கின்றன. பகல் கனவுகள் நம்மை உயர்ந்த நிலைக்கு உந்தலாம், அதன் மூலம் நாம் நம்முடைய திறன்களை மேம்படுத்த முயற்சிக்கிறோம். எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

மேலும் படிக்க | முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!

சில நேரங்களில் பகல்கனவு நன்றாக இருக்கலாம் ஆனால் அதிகப்படியான, நம் அன்றாட பணிகளை பாதிக்கும் அளவிற்கு காணும் பகல் கனவு மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அளவிற்கு அதிகமாகும் போது, இது தினசரி வேலை, செயல்த்திறன் மற்றும் உறவுகளை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பகல் கனவுகள் நம்மை நிஜ உலகின் சவால்களிலிருந்து விலக வைக்கலாஅம். இது நம்மை மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளில் சிக்க வைக்கலாம், மேலும் நம்மை சாத்தியமற்ற விஷயங்கள் குறித்த நம்பிக்கைகளில் வாழ வைக்கலாம். ஏனெனில் நாம் நிஜ உலகில் சாதிக்க முடியாத கனவுகளில் மூழ்கிவிடுகிறோம். இது யதார்த்தத்திலிருந்து நம்மை விலக்கி வைத்து, முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இறுதியாக, பகல் கனவுகள் நம்மை உயர்ந்த நிலைக்கு உந்துவதாக இருக்கலாம், ஆனால் அது நம்மை நிஜ உலகின் சவால்களிலிருந்து விலக வைக்கலாம். எனவே, பகல் கனவு காணும் அதே சமயத்தில், அதை நிஜ உலகின் சவால்களுக்கு எதிராக செயல்படுத்துவது முக்கியம். கனவு காணும் அதே நேரத்தில், நாம் நிஜ உலகின் சவால்களுக்கு எதிராக செயல்படுத்துவதும் முக்கியம். 

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் வீட்டு மருத்துவம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.   

மேலும் படிக்க | இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News