2024ல் இதுவரை ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ

Top Tamil Movies Of 2024: 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமா ஹிட் திரைப்படங்களின் முழுமையான லிஸ்ட்டை இந்த கட்டுரையில் காணலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 20, 2024, 12:35 PM IST
  • தமிழ் சினிமா ஹிட் திரைப்படங்கள்.
  • இந்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது.
2024ல் இதுவரை ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ title=

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமா ஹிட் திரைப்படங்களின் முழுமையான லிஸ்ட்டை இந்த கட்டுரையில் காணலாம். இந்த பட்டியலில் தற்போது வரை அதாவது ஜனவரி முதல் ஜூன் மாதம்  வரை தமிழ் சினிமாவில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது. 

கேப்டன் மில்லர் - Captain Miller: கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. தனுஷ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பில் இது உருவானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. மேலும் இதில் தனுஷூடன் பிரியங்கா மோகன், சிவ ராஜ் குமார் என பல திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படம்! மிரட்டல் போஸ்டர் வெளியீடு..

அரண்மனை 4 - Aranmanai 4: தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், சுந்தர்.சி. கமர்ஷியல்-காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இவர், பேய் படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் இயக்கியிருக்கும் படம்தான், அரண்மனை 4. இதில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

அயலான் - Ayalaan: ஆர்.டி.ராஜாவும் கொட்டபாடி ஜே.ராஜேஷும் தயாரித்த அயலான் படத்தில்
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கிய  இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.

கில்லி - Ghilli (Re-Release): கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அதிரடி திரைப்படம் கில்லி. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கில்லி படத்தை ரீ- ரிலீஸ் செய்தது. முதல் வாரத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. இதன் மூலம் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை கில்லி படைத்தது.

மகாராஜா - Maharaja: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.  இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். மேலும் இதில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா, முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  

கருடன் - Garudan: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது.

லால் சலாம் - Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டார் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டைட்டில் லீக்! என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News