ஜோதிடத்தில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளின் அடிப்படையில் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் எதிர்கால முடிவுகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் விண்மீன்களும் நம் வாழ்வின் சில அம்சங்களுடன் தொடர்புடையவை. வலுவிழந்த கிரகம், அசுப பலன்களைத் தர ஆரம்பிக்கிறது. எனவே, ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்தையும் பலப்படுத்துவதற்கான பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளங்களை அள்ளித்தரும் சுக்கிரன் கிரகம் 


ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் இன்பம், ஆடம்பரம், அன்பு, செல்வம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், அந்த நபர் வறுமையில் வாழ்கிறார். மாறாக, சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு நிறைய பணம் கிடைத்து, ஆடம்பர வாழ்க்கை வாழலாம். சுக்கிரன் வலுவாக இருந்தால் நிறைய பெயரும், புகழும், அங்கீகாரமும் கிடைக்கிறது. 


பலவீனமான சுக்கிரன் வறுமை, இரகசிய நோய்கள், தோல் தொடர்பான நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார். எனவே பிரச்சனைகளைத் தவிர்க்க, ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த பரிகாரம் செய்வது நல்லது.


சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்துவதற்கான பரிகாரங்களை செய்ய சிறந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. செய்ய வேண்டிய பரிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 


1. சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த வெள்ளை ஆடைகளை அதிகம் பயன்படுத்துங்கள். குறிப்பாக திங்கட்கிழமைகளில் வெள்ளை ஆடைகளை அணியுங்கள்.


2. சுக்கிரன் வலுப்பெற வெள்ளிக்கிழமை விரதமும் பெரும் பலன்களைத் தரும். இதனுடன், வெள்ளிக்கிழமையன்று லட்சுமி தேவியை வணங்கி, பாலில் செய்த இனிப்பை அர்பணித்தால், மிகுந்த மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறாள்.


3. வெள்ளிக்கிழமையன்று, ஸ்படிக மாலையுடன் 'ஓம் த்ராம் த்ரிம் த்ரௌண் ச: சுக்ராய நம' ('ऊं द्रां द्रीं द्रौं स: शुक्राय नम:' )என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.  108 முறை சொல்வது நல்லது. இல்லை என்றால், முடிந்தவரை ஜபிக்க முயற்சிக்கவும். முழு மனதுடன் பக்தியுடன் இதை ஜபித்தால், சில நாட்களில் பணத் தட்டுப்பாடு நீங்கத் தொடங்கும்.


மேலும் படிக்க | சகல செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை..!


4. வெள்ளிக்கிழமையன்று வீட்டில் சுக்ர யந்திரத்தை வைத்து பூஜிக்க தொடங்கலாம். அதனை தினமும் வழிபடவும். வெள்ளிக் கிழமையன்று வெண்ணிறப் பூக்களை சமர்பிப்பது மிகுந்த பலனைத் தரும். இதுவும் சுக்கிரனின் நிலையை பலப்படுத்துகிறது.


5. வெள்ளிக்கிழமை அன்று அரிசி, பால், சர்க்கரை, பாலில் செய்யப்பட்ட இனிப்புகள், வெண்ணிற ஆடைகளை ஏழைகளுக்கு தானம் செய்வதால் சுக்கிரன் வலுப்பெறும்.


6. கையில் வெள்ளி வளையல் அல்லது கழுத்தில் ஸ்படிக மாலை அணிவதுதாலும் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெறும்.


7. எந்தவொரு பெண்ணையும் ஒரு நாளும் அவமதிக்காதீர்கள்.  பெண்களை அவமதிப்பதால், அன்னை லட்சுமிக்கு கோபம் வரலாம்.


8. லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறவும், சுக்கிரனை வலுப்படுத்தவும்,  உங்களையும், உங்களைச் சுற்றி எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR