திருமணம்  செய்யாமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை அடைவதில்லை. திருமண தாமதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, கிரக நிலைகள் காரணமாக திருமணம் தாமதமாகும். பல சமயங்களில் திருமணம் நிச்சயமான பிறகும் திருமணம் நின்று போகும் நிலை ஏற்படலாம். திருமணத்தில் வரும் தடைகளை நீக்க எளிமையான சில பரிகாரங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், திருமணத்தில் வரும் தடைகளை அகற்ற ஜோதிட சாஸ்திரத்தின்படியும் வாஸ்து சாஸ்திரத்தின் படியும், சில பரிகாரங்கள் செய்வது உதவியாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமேற்கு திசையில் படுக்கையறை 


திருமண வயதை அடைந்தவர்களின் படுக்கை அறை எப்போதும் வட-மேற்கு திசையில் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லை என்றால், வடக்கு திசையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம். இது தவிர, படுக்கைக்கும் சுவருக்கும் இடையில் இடவெளி இருக்க வேண்டும்.


ALSO READ | Personality by Zodiac Sign: தித்திக்க பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!


வியாழக் கிழமை விரதம்


விரைவில் திருமணம் ஆக வேண்டும் என விரும்புபவர்கள் வியாழன் அன்று விரதம் இருக்கலாம். மேலும், இந்த நாளில் வாழை மரத்தை வழிபடுவதும் பலன் தரும். இது தவிர மஞ்சள் பொருட்களை தானம் செய்வதும் நன்மை தரும். அதே சமயம், பசுவுக்கு மஞ்சள் கலந்த கோதுமை மாவுடன் வெல்லம் கொடுக்க வேண்டும். முடிந்தால் பகவான் விஷ்ணுவின் 108 நாமங்களை ஜபிக்கவும். இதனால் திருமண தடைகள் நீங்கும்.


ஆறு முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணியலாம்


ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது திருமணம் தொடர்பான தடைகளை விலக்குவதில் நன்மை பயக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ருத்ராட்சம் முருக பெருமானின் வடிவமாக கருதப்படுகிறது. இதை அணிவதால் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.


சிவலிங்க அபிஷேகம்


சிவலிங்கத்திற்கு தவறாமல் அபிஷேகம் செய்வதும் பலன் அளிக்கும். சிவலிங்கத்தின் மீது தண்ணீர் அபிஷேகத்தை தவிர பசுவின் பச்சை பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம். சிவனுக்கு பிடித்த வில்வ இலைகளையும் அர்ப்பணிக்கலாம். இப்படி செய்தால்,  சிவபெருமான் உங்கள் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவார். திருமணமாகாத பெண்கள் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருக்கலாம். 


ALSO READ | Personality by Zodiac Sign: தங்கள் தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!!


பௌர்ணமி நாளில் ஆல மரத்தை வழிபடுதல்


பௌர்ணமி நாளில் ஆலமரத்தை 108 முறை வலம் வரவும். இது தவிர, வியாழன் அன்று ஆல மரத்திற்கு தண்ணீர் விடவும். இதன் மூலம் திருமண தடைகள் விரைவில் நீங்கி திருமண யோகம் கை கூடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | சகல செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR