Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெள்ளிக்கிழமை வெற்றிக்கிழமையாக மாறும்
பொதுவாக வெள்ளிக்கிழமையன்று சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பல பலன்களை அனுபவிக்கிறார்கள். வெள்ளியில் வெற்றியின் சிகரம் தொடும் அட்திர்ஷ்டசாலி ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Horoscope November 19, 2021: நட்சத்திரங்கள் தங்கள் தன்மையையும் போக்கையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இவற்றால் நம் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படுகின்றது. கிரகங்களின் மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் நமக்கு பலத்த வெற்றி கிடைக்கிறது. சில நேரங்களில் நமது நேரம் மிக சாதாரணமாக இருக்கிறது.
பொதுவாக வெள்ளிக்கிழமையன்று சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பல பலன்களை அனுபவிக்கிறார்கள். வெள்ளியில் வெற்றியின் சிகரம் தொடும் அட்திர்ஷ்டசாலி ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries): உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகரமான செய்திகளை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். வீடு மனை வாங்கும் எண்ணம் இருந்தால், இன்று அதற்கான செயல்களைத் துவக்கலாம். இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் நல்ல பெயரை வாங்குவார்கள். உங்கள் கடின உழைப்பால் கடினமான காரியங்களும் எளிதில் முடிவடையும்.
சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்கள் (Leo) குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவது நிதி நிலைமையின் சிக்கலை தீர்க்கும். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆலோசனையைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு பல முன்னேற்றங்கள் கிடைக்கும்.
ALSO READ: இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்; இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை
கன்னி (Virgo): உங்கள் நாள் இன்று பல வேடிக்கைகளுடனும் மகிழ்ச்சியான நிகழ்வுகளுடனும் நிறைந்திருக்கும். உங்கள் பிம்பம் வலுவாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளால் நன்மைகளைப் பெறுவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சொத்து பற்றிய எந்த தகவலையும் ரகசியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். பணியிடத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். உங்கள் நேர்மையும் விடா முயற்சியும் உங்களை பல உச்சங்களை எட்ட வைக்கும்.
விருச்சிகம் (Scorpio): பல சமூக நடவடிக்கைகளில் பங்கு கொண்டு நல்ல பெயரைப் பெறுவீர்க்ள். வெள்ளிக்கிழமைகள் பொதுவாக விருச்சிக (Scorpio) ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது. குடும்பம், பணியிடம், வியாபாரம் என அனைத்திற்கும் தேவையான முக்கிய முடிவுகளை வெள்ளிக்கிழமைகளின் எடுப்பது நன்மை பயக்கும்.
மீனம் (Pisces): விருப்பமான காரியங்களைச் செய்ய ஆர்வமாக இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். எந்தவொரு குடும்ப விஷயத்திலும் உங்கள் பேச்சு எடுபடும். தீராத பல பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். மீன ராசிக்காரர்களின் (Pisces) பண வரவு தொடர்ந்து அதிசயிக்கும் வகையில் நன்றாக இருக்கும்.
ALSO READ: Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR