Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமைகள் வேற லெவலில் வெற்றியைத் தரும்

பொதுவாக வியாழக்கிழமையன்று சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பல பலன்களை அனுபவிக்கிறார்கள். வியாழன் விழாக்கோலமாக மாறும் அந்த அட்திர்ஷ்டசாலி ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 05:53 AM IST
Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு வியாழக்கிழமைகள் வேற லெவலில் வெற்றியைத் தரும்  title=

Horoscope November 18, 2021: நட்சத்திரங்கள் தங்கள் தன்மையையும் போக்கையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இவற்றால் நம் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படுகின்றது. கிரகங்களின் மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் நமக்கு பலத்த வெற்றி கிடைக்கிறது. சில நேரங்களில் நமது நேரம் மிக சாதாரணமாக இருக்கிறது.

பொதுவாக வியாழக்கிழமையன்று சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் சாதகமான பல பலன்களை அனுபவிக்கிறார்கள். வியாழன் விழாக்கோலமாக மாறும் அந்த அட்திர்ஷ்டசாலி ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries): வியாழன் எப்போதுமே மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கும். இன்றும் உங்களுக்காக பொன்னான நாளாகவே அமையவுள்ளது. உங்கள் பணியில் பாராட்டப்படுவீர்கள். கசப்பை இனிப்பாக மாற்றும் கலையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பணப் பரிவர்த்தனை பிரிவில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்  (Cancer): வியாழக்கிழமை கடக (Cancer) ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாகும். இன்று உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பணி இடத்தில் புகழ் உங்களை தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

ALSO READ: Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!! 

துலாம் (Libra): வியாழக்கிழமைகளில் குரு பகவானின் முழு ஆசியும் துலா ராசிக்காரர்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இது ஏற்ற நாளாக இருக்கும். வருமானத்தைப் பெருக்க எடுக்கப்படும் முயற்சிகள் இப்போது வெற்றி பெறும். பழைய கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் முழுமையான அன்பும் ஆதரவும் இருக்கும்.

தனுசு (Sagittarius): இந்த நாள் உங்களுக்கு ஒரு புதிய பரிசைக் கொண்டு வரும். பொதுவாக வியாழக்கிழமைகளில் தனுசு ராசிக்காரர்கள் நினைத்த வேலைகளை எந்த அச்சமும் இல்லாமல் செய்யலாம். குருவின் அருளால் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்பின் வலிமையால், கடினமான வேலையை எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத பல நல்ல செய்திகள் இன்று உங்களைத் தேடி வரும்.

மீனம் (Pisces): வியாழக்கிழமை பொதுவாக மீன (Pisces) ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நாளாக கருதப்படுகின்றது. வாழ்க்கைத் துணை வணிகம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம். நினைத்த வேலைகள் நல்ல வேகத்தில் வெற்றிகரமாக நிறைவடையும். தொழில் தொடர்பான சில புதிய மற்றும் சுவாரஸ்யமான சலுகைகளைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் பொறுமையாக இருங்கள்.

ALSO READ: குருவும் சனியும் கூட்டணி சேர்ந்தால் என்ன விளைவு ஏற்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News