புதுடெல்லி: நவம்பர் 19ம் தேதி, அதாவது நாளை இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் (Lunar Eclipse 2021) நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணம் பல வழிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்
580 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சந்திர கிரகணம் ஏற்படப் போவதால் இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்று நம்பப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் கடந்த 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். கிரகணத்தின் காலம் சுமார் மூன்றரை மணி நேரம் இருக்கும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் மதியம் 12:48 மணி முதல் மாலை 04:17 மணி வரை நீடிக்கும். இது பகுதி சந்திர கிரகணம் என்பதால் கிரகணத்தின் இந்தியாவில் எந்த பாதிப்பும் இருக்காது. எனினும் சில ராசிக்காரகளுக்கு சில பாதிப்புகள் இருக்கும்
சந்திர கிரகணம் இந்த முறை ரிஷப ராசியில் சந்திரகிரகணம் நடக்க உள்ளது. எனவே, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன் காணப்படும். இது தவிர கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரகிரகணம் நடக்கிறது. ஜோதிடத்தின்படி, கிருத்திகை நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரக் கூட்டமாகக் கருதப்படுகிறது. எனவே கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ALSO READ | Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!!
நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்
நவம்பர் 19, 2021 அன்று சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் என்று நம்பப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 11.34 மணிக்கு கிரகணத்தின் ஆரம்பம் தொடங்கும். மாலை 5:33 மணிக்கு முடிவடையும். கிரகணத்தின் மொத்த கால அளவு 5 மணி 59 நிமிடங்கள் இருக்கும். இந்தியாவில் கிரகணத்தின் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்பதோடு, தோஷங்களும் ஏற்படாது, இருப்பினும் ஒரு குறிப்பிட்ட ராசி (Zodiac Signs), நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் கிரகண நேரத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பரிகாரம் செய்யாவிட்டாலும், எளிய முறையில் இறைவழிபாடு செய்வது நலம்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும்
மேஷம் - சந்திர கிரகணத்தின் தாக்கம் உங்கள் ராசியில் தெரியும். பணம் விஷயத்திலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். முக்கியமான பணிகளை அவசரமாகச் செய்வதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
ரிஷபம் - இம்முறை சந்திரகிரகணம் ரிஷப ராசியில் நிகழவிருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். கோபம், குழப்பம் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
ALSO READ | 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ..!!!
சிம்மம் - சந்திர கிரகணம் கிருத்திகை நட்சத்திரத்தில் நடக்கிறது. கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். உங்கள் ராசிக்கு அதிபதியும் சூரியன்தான். எனவே, இயல்பில் அடக்கத்தையும் பேச்சில் இனிமையையும் பேணுங்கள். உரிமைகளை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், சந்திர கிரகணத்தின் போது கடவுளை தியானிப்பது சிறந்த பலனைத் தரும். அருகில் கோயில் இருப்பின் அங்கு சென்று விநாயகர், துர்க்கை வழிபாடு செய்து வருவது நல்லது. எனினும் கர்ப்பமாக இருந்தால், வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. கிரகணம் முடிந்ததும் குளிக்க வெண்டும். கிரகண நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகள் அல்லது திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.
ALSO READ | அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்ட இந்த ‘5’ விஷயங்களை கடைபிடிக்கவும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR