Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!!
டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் இந்த நபர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
டிசம்பர் 2021 ராசிபலன்: டிசம்பர் 2021 (December 2021) சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. கிரகங்களின் இந்த ராசி மாற்றங்கள், சில ராசிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். அவர்கள் டிசம்பர் 2021 இல் முன்னேற்றத்தைப் பெறுவார்கள், மேலும் பெரிய அளவில் பண ஆதாயங்களையும் பெறுவார்கள். டிசம்பர் மாதத்திற்கான அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
டிசம்பர் மாதத்திற்கான அதிர்ஷ்ட ராசிகள்
மேஷம் (Aries) - மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம் என்றாலும், பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பண வரவு இருக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இந்த பயணம் வேலை தொடர்பானதாக இருந்தால், அது நிச்சயமாக பலனளிக்கும்.
ரிஷபம் (Taurus) - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல செயல்களைச் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுவாக இருக்கும். இழந்த பணம் உங்களை வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கடகம் 9 (Cancer) - கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்பு ஏதேனும் கிடைத்தால், அதை தவறவிடாதீர்கள். இது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். போதிய பணமும் கிடைக்கும்.
ALSO READ | Astrology: இந்த 5 ராசிக்காரர்களை கண்களை மூடிக்கொண்டு நம்பலாம்!!
சிம்மம் (Leo) - சிம்மம் ராசிக்காரர்களுக்கு டிசம்பரில் நல்ல பண வரவு இருக்கும். உங்கள் தொழிலில் பெரிய பதவியை பெறலாம். வணிகர்களும் பெரிய அளவில் ஆர்டர்களைப் பெறலாம். இது லாபகரமானதாக இருக்கலாம். பணம் வருவதற்கான புதிய வழிகளும் உருவாகும், பழைய தடைப்பட்ட பணமும் கிடைக்கும். முடிந்தால், கொஞ்சம் பணத்தை முதலீடு செய்யுங்கள்.
கன்னி (Virgo) - கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் பண மழை பெய்யும். பல வழிகளில் பணம் கிடைக்கும். புதிய பணிகள் தொடங்கும். தடைபட்ட பழைய பணிகளையும் ஆரம்பிக்கலாம். வசதிகள் அதிகரிக்கலாம். இந்த வருடம் சில நல்ல செய்திகளைக் கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ:Astrology: உங்க மனைவிக்கு இந்த ராசியா? நீங்க பயங்கர அதிர்ஷ்டசாலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR