ATM Transaction Alert: சில வருடங்களுக்கு முன்பு வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கவும், போடவும் மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நிற்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது நீங்களே கூட நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்திருக்கலாம். பணம் எடுப்பது முதல் டெபாசிட் செய்வது, பாஸ்புக் அப்டேட், முகவரி, தொலைபேசி எண் மாற்றுவது வரை என வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியிருந்தது. இதுமட்டுமின்றி சில சமயங்களில் நீண்ட நேரம் வரிசையில் நின்றிக்கும் போது, வங்கி சர்வர் டவுன் என அறிவிக்கப்பட்டு பலமுறை வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. ஏனென்றால் இப்போது நீங்கள் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை மற்றும் ஏடிஎம் இயந்திரம் மூலம் உங்கள் பணத்தை நிமிடங்களில் எடுக்கலாம். அதே சமயம், வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, மக்களை ஏமாற்றும் புதிய வழிகளில் மோசடி செய்பவர்கள் வருவதை மறுக்க முடியாது. 


எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நீங்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக மோசடிக்கு ஆளாகலாம். ஏனெனில் பெரும்பாலும் மக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது சில தவறுகளைச் செய்கிறார்கள். அந்த தவறுகளை தவிர்த்தால் ஏடிஎம் மோசடியில் இருந்து தப்பிக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது செய்ய வேண்டிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க: ATM Fraud, கார்டு குளோனிங், Phishing மோசடி போன்றவற்றை எவ்வாறு தவிர்ப்பது


ஏடிஎம் கீபேடை கையால் மூடி மறைக்கவும்:
எப்பொழுதும் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது, கார்டின் பின் நம்பரை உள்ளீடும் போது கையால் கீபேடை மறைப்பதில்லை. அது தவறு. ஒவ்வொருமுறையும் நீங்கள் ஏடிஎம் செல்லும் போது ஏடிஎம் இயந்திரத்தில் உங்கள் பின்னை உள்ளிடும் போதெல்லாம், மற்றொரு கையால் கீபேடை மூடி மறைக்கவும். இதன் மூலம் உங்களது பின் நம்பரை யாரும் அறிந்துக்கொள்ள முடியாது மற்றும் அங்கு இருக்கும் கேமராவில் பதிவாகாது.


அந்நியர்களிடம் உதவி கேட்கக்கூடாது:
ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்கள் அந்நியர்களிடமிருந்து உதவி பெறுவதுதான். இதைச் செய்யவே வேண்டாம். ஏடிஎம்மில் பணம் எப்படி எடுப்பது எனத் தெரியாவிட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் அண்ணன், தந்தை, மகன், மகள் அல்லது நம்பகமான யாரேனும் ஒருவரை அழைத்துச் செல்லுங்கள். இது தவிர, ஒவ்வொரு ஏடிஎம்மிலும் ஒரு பாதுகாவலர் இருக்கிறார். நீங்கள் அவரின் உதவியைப் பெறலாம். ஆனால் உங்களுக்கு தெரியாத நபரிடம் உதவியை ஒருபோதும் நாட வேண்டாம்.


மேலும் படிக்க: இந்த 2 விஷயங்கள் செய்தால் மின்கட்டணம் அதிகம் வராது.. பணத்தை மிச்சப்படுத்தலாம்


பரிவர்த்தனை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பலர் அவசரப்பட்டு, கையில் பணம் வந்தவுடன், கார்டை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே வந்து விடுவார்கள். திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதெல்லாம், பரிவர்த்தனை முடிவடையும் வரை காத்திருந்து, பின்னர் அங்கிருந்து செல்லவும்.


குளோனிங் சாதனம் -எச்சரிக்கை தேவை:
பலர் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும், எதையும் கண்டுகொள்ளாமல் பணத்தை எடுத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் இயந்திரத்தில் குளோனிங் சாதனம் நிறுவப்பட்டுள்ளதா என்று பார்க்க கார்டு செருகப்படும் இடத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்காமல், காவல்துறை மற்றும் வங்கிக்கு தகவல் தெரிவியுங்கள்.


மேலும் படிக்க: மனைவியுடன் சண்டைக்கு பிறகு கணவன் செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ