எஸ்பிஐ ஏடிஎம் கார்டு இருக்கிறதா? அப்போ ரூ.20 லட்சம் வரை காப்பீடு இலவசமாக கிடைக்கும்

SBI Free Insurance: பாரத ஸ்டேட் வங்கி (SBI) டெபிட் கார்டு வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 20 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 21, 2022, 09:05 PM IST
  • ஏடிஎம் கார்டு மூலம் விபத்துக் காப்பீடு கிடைக்கும்.
  • கார்டின் தன்மைக்கேற்ப காப்பீட்டுத் தொகை மாறுபடும்.
  • விபத்து நடந்த 45 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு இருக்கிறதா? அப்போ ரூ.20 லட்சம் வரை காப்பீடு இலவசமாக கிடைக்கும் title=

SBI Debit Card Holders: ஏறக்குறைய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறோம். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டு கார்டு மூலம் எளிதாக பணம் எடுக்கலாம், கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் விபத்துக் காப்பீடு கிடைக்கும் என்பது வெகு சிலருக்கே தெரியும். இந்த விபத்துக் காப்பீடு மூலம், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவரின் மரணம் அல்லது விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். பலருக்கு இதுக்குறித்து சரியான விவரங்கள் தெரியாததால், ஏடிஎம் மூலம் கிடைக்கும் காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆனது, டெபிட் கார்டு வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 20 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. கார்டின் தன்மைக்கேற்ப இந்தக் காப்பீட்டுத் தொகை மாறுபடும்.

எஸ்பிஐ இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். இந்தக் காப்பீட்டுத் தொகை 25 ஆயிரம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஏடிஎம் கார்டின் வகையைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை வங்கி தனது இணையதளத்தில் அளித்துள்ளது. விபத்து நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் ஏடிஎம் இயந்திரம் அல்லது பிஓஎஸ்/இகாம் ஆகியவற்றில் ஒரு முறையாவது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே கார்டு வைத்திருப்பவருக்கு இந்தக் காப்பீட்டுத் தொகை வழங்க முடியும். 

மேலும் படிக்க: எஸ்பிஐ வாடிக்கையாளர் எச்சரிக்கை! இனி இந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உயர்வு!

டெபிட் கார்டு வைத்திருப்பவர் சாலை விபத்து மற்றும் விமான விபத்தின் போது மரணம் ஏற்பட்டால் ஏடிஎம் கார்டில் கிடைக்கும் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார். இந்த காப்பீட்டுத் தொகை அட்டையின் வகையைப் பொறுத்தது. விமான விபத்து ஏற்பட்டால், டெபிட் கார்டைப் பயன்படுத்தி டிக்கெட் வாங்கி இருந்தால், காப்பீட்டைப் பெறலாம்.

ஏடிஎம் காப்பீட்டைப் பெற வங்கிக் கிளையை அணுக வேண்டும். டெபிட் கார்டு வைத்திருப்பவர் இறந்து விட்டால், டெபிட் கார்டு வைத்திருப்பவரின் நாமினி வங்கிக் கிளையை அணுக வேண்டும். அங்கு சென்ற பிறகு விண்ணப்பம் கொடுக்க வேண்டும், தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக்குச் சென்று கார்டு வைத்திருப்பவர் விபத்து நடந்த 45 நாட்களுக்குள் இந்தக் கோரிக்கையைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் படிக்க: எஸ்பிஐ மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News