ஆதார் அட்டை தொடர்பான புதிய விதி; UIDAI வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இப்போது குழந்தைகளின் ஆதார் செயல்முறையை மாற்றியுள்ளது. குழந்தைகளின் ஆதார் அட்டை எவ்வாறு தயாரிக்கப்படும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
Aadhaar Card Update: ஆதார் அட்டை இன்றைய காலத்தில் கட்டாய ஆவணம். ஆதார் தொடர்பான ஒரு முக்கிய செய்தி உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை பெறுவதற்கான செயல்முறையை மாற்றியுள்ளது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட டிஸ்சார்ஜ் ஸ்லிப் மற்றும் பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு குழந்தையின் ஆதார் (Baal Aadhaar) க்கு விண்ணப்பிக்கலாம் என்று UIDAI தெரிவித்தது.
ஆதார் அட்டை விதிகள் மாற்றப்பட்டன
பால் ஆதார் என்பது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையின் நீல நிற வகை அட்டை என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம் (பால் ஆதார் அட்டை நன்மைகள்). இப்போது புதிய விதியின் கீழ், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் (கைரேகை மற்றும் கண் ஸ்கேன்)தேவையில்லை. ஆனால், குழந்தைக்கு ஐந்து வயதானவுடன் கட்டாயமாக பயோமெட்ரிக் விபரங்களை அப்டேட் தேவைப்படும். அப்படி அப்டேட் செய்யவில்லை என்றால், பால ஆதார் செல்லாததாகி விடும்.
ALSO READ | புதிய ஊதியக் குறியீடு: சம்பளம், ஓவர்டைம் விதிகளில் முக்கிய மாற்றம்..!!
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்களில் பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், என்ஆர்இஜிஏ வேலை அட்டை போன்றவை அடங்கும். முகவரி சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்களில் பாஸ்போர்ட், வங்கி கணக்கு பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை, ரேஷன் கார்டு போன்றவை அடங்கும்.
குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை பெறும் முறை
1. குழந்தைளுக்கு பால் ஆதார் அட்டை பெற, முதலில் UIDAI வலைத்தளத்திற்கு செல்லவும்.
2. இப்போது ஆதார் அட்டை பதிவு செய்யும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது குழந்தையின் பெயர் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்கள் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
4. இப்போது குடியிருப்பு முகவரி, பகுதி, மாநிலம் போன்ற மக்கள்தொகை விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
5. ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய 'அப்பாயிண்ட்மெண்ட்' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
6. அருகில் உள்ள பதிவு மையத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அப்பாயிண்ட்மெண்டை திட்டமிட்டு, ஒதுக்கப்பட்ட தேதியில் அங்கு செல்லுங்கள்.
ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!
பதிவு மையத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்
அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA), உறவின் சான்று (POR) மற்றும் பிறந்த தேதி (DOB) போன்ற தேவையான ஆவணங்களை பதிவு மையத்திற்கு எடுத்துச் செல்லவும். மையத்தில் இருக்கும் ஆதார் அதிகாரி அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார். உங்கள் குழந்தை ஐந்து வயதுக்கு மேல் இருந்தால் பயோமெட்ரிக் தரவு எடுக்கப்படும். ஆனால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பயோமெட்ரிக் தரவு தேவையில்லை, மக்கள்தொகை தரவு மற்றும் முக அங்கீகாரம் மட்டுமே தேவைப்படும்.
பால் ஆதார் 90 நாட்களில் கிடைக்கும்
இந்த செயல்முறைக்குப் பிறகு பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள ஒப்புதல் எண்ணைப் பெறுவார்கள். அதன் பிறகு 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். 90 நாட்களுக்குள் பால் ஆதார் அட்டை உங்களுக்கு வந்து சேரும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR