Bank Holidays: இந்த வாரம் வங்கி விடுமுறை: இந்த வாரம் பண்டிகை காரணமாக நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறைகள் இருப்பதை வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். இவற்றில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் அடங்கும். சில நகரங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எந்த நகரத்திலும் வங்கள் செயல்படாது என்பதை தெரிந்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். நீங்கள் வங்கித் தொடர்பான வேலைகளை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

9 செப்டம்பர் 2021 - தீஜ் (ஹரித்தாலிகா)


செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் வங்கிகள் கேங்டாக்கில் (சிக்கிம்) மூடப்படும்.


10 செப்டம்பர் 2021 - விநாயகர் சதுர்த்தி/சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷ)/விநாயகர் சதுர்த்தி/வரசித்தி விநாயக விரதம். மாதத்தின் முக்கிய விடுமுறை நாள் விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 10). இந்த நாளில், அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.


11 செப்டம்பர் 2021 -கணேஷ் சதுர்த்தி (2 வது நாள் கொண்டாட்டம்) மற்றும் இரண்டாவது சனிக்கிழமை


12 செப்டம்பர் 2021 - வாராந்திர விடுமுறை (ஞாயிறு)


அனைத்து வங்கிகளும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும், சில விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்க.


ALSO READ | இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருக்கிறதா? அக்டோபருக்குள் இந்த வேலையை முடிக்கவும்


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாட்காட்டியின்படி, செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படும். இதில் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.


இந்த மாதத்தில் மொத்தம் 12 நாட்அழ  விடுமுறை:
செப்டம்பர் 5 - ஞாயிறு
செப்டம்பர் 8 - ஸ்ரீமந்த சங்கர்தேவ தேதி (குவகாத்தி, அசாம்)
9 செப்டம்பர் - தீஜ் ஹரித்தாலிகா (கேங்டாக், சிக்கிம்)
செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி (அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி)
செப்டம்பர் 11 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை / விநாயகர் சதுர்த்தியின் இரண்டாவது நாள் (பனாஜி)
12 செப்டம்பர் - ஞாயிறு
17 செப்டம்பர் - கர்ம பூஜை (ராஞ்சி)
செப்டம்பர் 19 - ஞாயிறு
20 செப்டம்பர் - இந்திராஜத்ரா (கேங்டாக், சிக்கிம்)
செப்டம்பர் 21 - ஸ்ரீ நாராயண குரு சமாதி நாள் (கொச்சி, திருவனந்தபுரம்)
செப்டம்பர் 25 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
26 செப்டம்பர் - ஞாயிறு


ALSO READ | NACH system: ஞாயிற்றுக்கிழமை, வங்கி விடுமுறையிலும் சம்பளம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR