வீட்டுக் கடன் என்பது உங்கள் கனவு வீட்டை வரிச் சலுகைகளுடன் வாங்க உதவும் ஒரு சிறந்த நிதித் தயாரிப்பாகும்.  நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும், இது முன்பணம் என்றும் அழைக்கப்படுகிறது.  இது மொத்த சொத்து மதிப்பில் 10% முதல் 20% வரை இருக்கலாம்.  நீங்கள் முன்பணத்தை செலுத்திய பிறகு, மீதமுள்ள தொகையை நீங்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டுக் கடனாகப் பெறலாம், மேலும் இந்தத் தொகை உங்கள் கடன் ஒப்பந்தத்தின்படி ஒரு குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Masked Aadhaar: ஆதாரின் நகலை பகிரவேண்டாம்: ஆதார் எண்ணை பகிர டிப்ஸ் தரும் UIDAI 


வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது, ஆனால் அந்த தொகை கிடைக்குமா இல்லையா என்பது உங்கள் தகுதி, கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.  எதிர்காலத்தில் அந்த கடனை உங்களால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை அறிய உங்கள் கிரெடிட் வரலாற்றை பார்த்து அதன் மூலம் கடனளிப்பவர்கள் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடுகின்றனர்.  நீங்கள் வாங்கிய கடனின் அசல் தொகையையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தத் தவறினால், கடன் வழங்குபவர் உங்கள் சொத்தைப் பறிமுதல் செய்ய நேரிடும்.


சில முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், கிளையில் அல்லது நிதி நிறுவனத்தின் தொடர்புடைய ஆன்லைன் போர்ட்டல் மூலமாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.  உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் பிற தகுதி அளவுகோல்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில் நிதி நிறுவனம் உங்கள் வீட்டுக் கடனை சில தினங்களில் வழங்கிவிடும்.  உங்கள் வீட்டுக் கடனைப் பொறுத்து, பிரிவு 80C, 80EE மற்றும் பிரிவு 24ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம்.


நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் வட்டி விகிதம், தவணைக்காலம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.  இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது நீங்கள் செலுத்தும் இஎம்ஐ உங்கள் சம்பளத்தில் 40%க்கு மேல் இருக்கக்கூடாது.  ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மற்ற கடன் வழங்குபவர்கள் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் சில சலுகைகளை வழங்கினால் தாராளமாக அவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.  கீழே 30க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன்களுக்கு மலிவான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR