நாம் அனைவரும் 2020-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம்... அதே பக்கத்தில், புதிய ஆண்டில் என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்புகள் நம் மனதில் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக மாணவர்கள் மனதில் பொதுவாக எழும் சந்தேகம் நடப்பு ஆண்டில் எத்தனை விடுமுறை வரும் என்பது தான். அந்த வரிசையில் மாணவர்களின் மனதை குளிர்விக்க வங்கி துறை நடப்பு ஜனவரி மாதத்தில் நெடு விடுமுறையினை அறிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி 2020 ஜனவரியில் வங்கி விடுமுறைகளை குறிப்பிட்டு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி புதிய ஆண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி என்பது விடுமுறை நிறைந்த மாதம் ஆகும்.
 
ரிசர்வ் வங்கி வலைத்தளத்தில் வெளியான தகவல்கள்படி, ஜனவரி முழுவதும் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்படுகின்றன. இந்த நாட்களில் வங்கிகளில் எந்த செயல்பாடும் இருக்காது. அரசு மற்றும் தனியார் வங்கி விடுமுறைகள் இதில் அடங்கும். 


அதாவது., 4 ஞாயிற்று கிழமைகள், 2-ஆம் மற்றும் 4-ஆம் சனிக்கிழமை என 2 நாட்கள் மேலும் 8 நாட்கள் வங்கி விடுமுறை என நடப்பு மாதத்தில் 14 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, ஆண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் வங்கி தொடர்பான வேலைக்கான ஏதேனும் திட்டமிடல் உங்களிடம் இருந்தால், முழுமையான பட்டியலைக் கவனியுங்கள். 


Date Day Holiday Celebrated in
1 January 2020 புதன் புத்தாண்டு நாடு முழுவதும்
2 January 2020 வியாழன் மன்னம் ஜெயந்தி கேரளா
2 January 2020 வியாழன் குரு கோவிந் சிங் ஜெயந்தி பல்வேறு மாநிலங்களில்
11 January 2020 ஞாயிறு  மிஷனரி தினம் மிஷ்ரோம்
15 January 2020 புதன் போகி, பொங்கள், மகர சங்க்ராந்தி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அஸ்ஸாம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்ட்ரா
16 January 2020 வியாழன் திருவள்ளுவர் தினம் புதுவை, தமிழ்நாடு
17 January 2020 வெள்ளி  உழவர் திருநாள் புதுவை, தமிழ்நாடு
23 January 2020 வியாழன் நேதாஜி மேற்குவங்கம், திரிபுரா, ஒடிசா மற்றும் அஸ்ஸாம்
25 January 2020 சனி ஹிமாச்சல் தினம் சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம்
30 January 2020 வியாழன் வசந்த பஞ்சமி பல்வேறு மாநிலங்களில்
31 January 2020 வெள்ளி Me-dam-me-phi அஸ்ஸாம்