புதுடெல்லி: ஜோதிடத்தின் பார்வையில் ஏப்ரல் மாதம் சிறப்பானதாக இருக்கப் போகிறது. உண்மையில், இந்த மாதம் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ராசியை மாற்றப் போகின்றன. இதில் சனி, செவ்வாய், ராகு-கேது உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாதம் நிகழவிருக்கும் சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு-கேதுவும் 18 மாதங்களுக்குப் பிறகு ராசியை மாற்றப் போகிறார்கள்.


ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் இத்தகைய நிலைப்பாட்டால் அனைத்து 12 ராசிகளும் பாதிக்கப்படும். ஆனால் இந்த மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 


மிதுனம்: ஏப்ரல் 2022 மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உண்மையில், இந்த மாதம் ராசிகளில் ஏற்படும் கிரகங்களில் பெயர்ச்சியானது, மிதுன ராசிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். இதனுடன், சில பெரிய லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.


இது தவிர, இந்த மாதம் ஏழரை ஆண்டுகள் சனியின் பார்வையில் இருந்து பட்ட கஷ்டங்களுக்கும் விடுதலை கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த மாதம் பணமும் வந்து சேரும். தொழில்-வியாபாரத்தில் நேரம் சாதகமாக இருக்கும்.


கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு ராசி மாற்றங்கள் சிறப்பான பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் சாதகமான பலன்களைக் கொடுக்கும். 


அரசு வேலை செய்பவர்களுக்கும் சிறந்த பலன்களைப் பெறலாம். இது தவிர பணியிடத்தில் மரியாதையும் கெளரவமும் கிடைக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும்.


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது


மகர ராசி: ஏப்ரல் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இம்மாதம் முடிவடையும். சனிபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி கும்ப ராசிக்கு பிரவேசிப்பதால் பலன் கிடைக்கும். இந்த மாதம் நிதி நிலைமை வலுவாக இருக்கும். இருப்பினும், கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


மீன ராசி: ஏப்ரல் மாதம் மீன ராசியினருக்கு குதூகலத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் அதிர்ஷ்டமான மாதமாக அமையப் போகிறது. குருவின் ராசி மாற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.


தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும்.. வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புவோருக்கு, இந்த நேரம் சிறந்ததாக இருக்கும். இது தவிர, வேலை செய்பவர்களும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR